கால்வின் பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கால்வின் பிரசாத் (Calvin Prasad) பிஜி நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். 1980 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11 ஆம் நாள் இவர் பிறந்தார். இந்தோ பிஜிய சதுரங்க வீர்ரான இவர் பிஜி நாட்டின் சிறிய சதுரங்க சமுகத்தின் முதலாவது கேண்டிடேட்டு மாசுட்டர் பட்டத்தைப் பெற்றவர் என்ற சிறப்பைப் பெற்றார் [1][2].

இவர் பிஜி நாட்டை நான்கு முறை அனைத்துலக சதுரங்கப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.2003 ஆம் ஆண்டு நடைபெற்ற பிஜி அழைப்பு சதுரங்கப் போட்டி,, 2004 இல் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்ற மண்டல சாம்பியன் பட்டப் போட்டி [3], மற்றும் 2004 மயோர்க்கா, 2006 துரின் சதுரங்க ஒலிம்பியாடு போட்டி [4] என்பவை அப்போட்டிகளாகும்.

பிஜியின் முன்னாள் தேசிய சாம்பியன் (2004) போன்ற பல போட்டிகளில் கால்வின் வெற்றிகளைப் பெற்றுள்ளார் [1]. இவர் குந்தன் சிங் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியின் நடப்பு சாம்பியன் ஆவார் [5].

கடந்த 4 ஆண்டுகளாக, அவர் பிஜி நாட்டின் சதுரங்கக் கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றியுள்ளார், தற்போது இக்குழுவின் துணைத் தலைவராக உள்ளார்.

பிரசாத் 2006 ஆம் ஆண்டின் பிஜி நாட்டின் தேசிய ஆண் தடகள வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [6].

2011 ஆம் ஆண்டில் பிஜி நாட்டின் தேசிய சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்று பிரசாத் பிஜி நாட்டின் தேசிய சதுரங்க சாம்பியனானார் [7]. கடைசியாக இந்த பட்டத்தை இவர் 2004 ஆம் ஆண்டில் வென்றார். பிரசாத்துக்கு 2011 ஆண்டின் சிறந்த சதுரங்க வீரர் விருதும்' அந்நாட்டில் வழங்கப்பட்டது.

2016 – ஆம் ஆண்டில் நடைபெற்ற சதுரங்கக் கூட்டமைப்பின் பொதுக் குழு கூட்டத்தில் பிஜி சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து கால்வின் பிரசாத் நீக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்வின்_பிரசாத்&oldid=3239791" இருந்து மீள்விக்கப்பட்டது