கால்சியம் புரோப்பேனோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கால்சியம் புரோப்பேனோயேட்டு[1]
Calcium propanoate.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் புரோப்பேனோயேட்டு
வேறு பெயர்கள்
கால்சியம் புரோப்பியோனேட்டு
கால்சியம் டைபுரோப்பியோனேட்டு
மைகோபன்
இனங்காட்டிகள்
4075-81-4 Yes check.svgY
ChemSpider 18840 N
EC number 223-795-8
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D09875
பப்கெம் 19999
பண்புகள்
C6H10CaO4
வாய்ப்பாட்டு எடை 186.2192 கி/மோல்
தோற்றம் வெண்மையான படிகத் திண்மம்
49 கி/100 மிலி (0 °செல்சியசு)
55.8 கி/100 மி.லி (100 °செல்சியசு)
கரைதிறன் மெத்தனால், எத்தனால் போன்றவற்றில் கரையும்
அசிட்டோன், பென்சீன் போன்றவற்றில் கரையாது.
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கால்சியம் புரோப்பேனோயேட்டு (Calcium propanoate) என்பது Ca(C2H5COO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் புரோப்பியோனேட்டு என்றும் இதை அழைக்கலாம். புரோப்பேனோயிக் அமிலத்தின் கால்சியம் உப்பு என்று இதை வகைப்படுத்துகிறார்கள்.

பயன்கள்[தொகு]

உணவுத் தரப்பாதுகாப்புக் கையேட்டில் ஒரு உணவு சேர்க்கைப் பொருளாக ஐரோப்பிய எண் 282 என வழங்கி பட்டியலிடப்பட்டுள்ளது. ரொட்டி, பிற வேகவைத்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மோர் மற்றும் பிற பால் பொருட்கள் உட்பட கால்சியம் புரோப்பேனோயேட்டு பல்வேறு வகையான உணவு தயாரிப்புகளில் ஒரு பாதுகாக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது[2]. விவசாயத்தில் இதைத்தவிர மற்றவற்றுடன், பசுக்களில் பால் காய்ச்சலைத் தடுக்கவும், தீவன நிரப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது[3]. பென்சோயேட்களைப் போலவே நுண்ணுயிரிகள் தங்களுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து கொள்வதை தடுக்கிறது. இருப்பினும், பென்சோயேட்களைப் போலன்றி, புரோபியோனேட்டுகள் செயல்படுவதற்கு அமில சூழல் தேவையில்லை[4]. கால்சியம் புரோப்பேனோயேட்டு ரொட்டி தயாரிப்புகளில் பொதுவாக 0.1-0.4% அச்சு தடுப்பானாக பயன்படுத்தப்படுகிறது [5]. அச்சு மாசுபாடு ரொட்டி தயாரிப்பாளர்களிடயே ஒரு கடுமையான பிரச்சினையாகக் கருதப்படுகிறது, மேலும் பொதுவாக ரொட்டி சுடுதலில் காணப்படும் நிபந்தனைகள் அச்சு வளர்ச்சிக்கு உகந்த நிலைமைகளுக்கு அருகில் உள்ளன [6].

சில பத்தாண்டுகளுக்கு முன்னர் பேசிலசு மெசென்டெரிகசு எனப்படும் கயிறு வடிவ பாக்டீரியா ஒரு கடுமையான பிரச்சினையாக இருந்தது [7]. கால்சியம் புரோப்பேனோயேட்டும் சோடியம் புரோப்பேனோயேட்டும் இப்பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுவதில் பயனுள்ளதாக இருக்கின்றன [7].

புரோப்பியோனேட்டுகளின் வளர்ச்சிதை மாற்றம் அவற்றின் புரோப்பியோனைல் இணைநொதி ஏ ஆக மாறுவதில் தொடங்குகிறது. கார்பாக்சிலிக் அமிலங்கள் வளர்சிதை மாற்றத்தில் வழக்கமான முதல் படியும் இதுவேயாகும். புரோப்பேனாயிக் அமிலம் மூன்று கார்பன்களைக் கொண்டிருப்பதால், புரோப்பியோனைல் - இணைநொதி ஏ நேரடியாக பீட்டா ஆக்சிசனேற்றம் அல்லது சிட்ரிக் அமில சுழற்சிகளில் நேரடியாக நுழைய முடியும். பெரும்பாலான முதுகெலும்புகளில், புரோபியோனைல் இணைநொதி ஏ ஆனது டி-மெத்தில்மாலோனைல்- இணைநொதி ஏ வாக கார்பாக்சிலேற்றம் செய்யப்படுகிறது, பின்னர் இது எல்-மெத்தில்மலோனியல்-இணைநொதி ஏ வுக்கு மாற்றியமாக்கப்படுகிறது. வைட்டமின் பி12-சார்ந்த நொதியின் வினையூக்கத்தால் எல்-மெத்தில்மலோனியல்- இணைநொதி ஏ வை சக்சினைல் இணைநொதி ஏ வாக மறுசீரமைப்பு அடைகிறது. இது சிட்ரிக் அமில சுழற்சியின் இடைநிலையாகும், மேலும் இதை உடனடியாக அங்கே இணைக்க முடியும்.

கால்சியம் புரோப்பியோனேட்டு அல்லது மருந்தற்ற மருந்தாக குழந்தைகளுக்கு தினசரி ரொட்டியில் இரட்டை இனமறியா மருந்தாக கொடுத்து சோதிக்கப்பட்டது. இவ்விரண்டு நடவடிக்கைகளிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என்றாலும், குழந்தைகளின் விகிதத்தில் புள்ளிவிவர ரீதியாக சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்பட்டன. அவர்களின் நடத்தைகள் மேம்பட்ட நடத்தை விகித்த்துடன் ஒப்பிடும்போது 52 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தன [8].புரோப்பேனோயிக் அமிலம் நேரடியாக கொறித்துண்ணிகளின் மூளையில் செலுத்தப்பட்டபோது இது மீளக்கூடிய நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தியது. அதியியக்கம், . சமூகக் குறைபாடு, விடாமுயற்சி மூளை மாற்றங்கள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும் [9]

பழங்களின் மீது கால்சியம் புரோப்பியோனேட்டை பூஞ்சைக் கொல்லியாகப் பயன்படுத்தலாம் [10].

1973 ஆம் ஆண்டு அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மில்லியனுக்கு 180 பகுதிகள் கால்சியம் புரோப்பியோனேட்டு கலந்துள்ள நீர் புளூகில் எனப்படும் நன்னீர் வகை மீன்களுக்கு சற்று நச்சுத்தன்மை வாய்ந்ததாகக் கண்டறியப்பட்டது [11].

மேற்கோள்கள்[தொகு]

 1. Merck Index, 11th Edition, 1705.
 2. Codex Alimentarius data for calcium propanoate பரணிடப்பட்டது 2006-10-21 at the வந்தவழி இயந்திரம்
 3. Center for Food and Nutrition Policy review of use of calcium propanoate as an organic agent in cow feed and as milk fever prevention
 4. "Ingredients -- Calcium propionate". பார்த்த நாள் 2007-03-10.
 5. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2010-04-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-02-28.
 6. "Keeping molds, bacteria at bay". பார்த்த நாள் 2007-03-24.
 7. 7.0 7.1 Furia, T. E. (1973). CRC Handbook of Food Additives. CRC Handbook of Food Additives. CRC Press.
 8. S. Dengate; A. Rubin (2002). "Controlled trial of cumulative behavioural effects of a common bread preservative". Journal of Paediatrics and Child Health 38 (4): 373-376. doi:10.1046/j.1440-1754.2002.00009.x. 
 9. D. F. MacFabe; D. P. Cain; K. Rodriguez-Capote; A. E. Franklin; J. E. Hoffman; F. Boon; A. R. Taylor; M. Kavaliers et al. (2007). "Neurobiological effects of intraventricular propionic acid in rats: Possible role of short-chain fatty acids on the pathogenesis and characteristics of autism spectrum disorders". Behavioural Brain Research 176 (1): 149–169. doi:10.1016/j.bbr.2006.07.025. 
 10. Biggs, A. R.; El-Kholi, M. M.; El-Neshawy, S.; Nickerson, R. (1997). "Effects of Calcium Salts on Growth, Polygalacturonase Activity, and Infection of Peach Fruit by Monilinia fructicola". Plant Disease 81 (4): 399. doi:10.1094/PDIS.1997.81.4.399. 
 11. "OPP PESTICIDE ECOTOXICITY DATABASE - Details - Pesticide: Calcium propionate". EPA / USDA / NIFA.

புற இணைப்புகள்[தொகு]