கால்சியம் பிரக்டோபோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கால்சியம் பிரக்டோபோரேட்டு (Calcium fructoborate) என்பது Ca[(C6H10O6)2B]2∙4H2O கட்டமைப்பு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் போரான், கால்சியம், பிரக்டோசு ஒற்றைச் சர்க்கரை ஆகியன கலந்துள்ளன [1]. சில தாவரங்களில் கால்சியம் பிரக்டோபோரேட்டு இயற்கையாகவே காணப்படுகிறது. ஓர் உணவுக் குறைநிரப்பியாக இச்சேர்மம் பேரளவில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]