கால்சியம் சிட்ரேட்டு
2D structure of calcium citrate
| |
கால்சியம் சிட்ரேட்டு நான்குநீரேற்று[1]
| |
கால்சியம் சிட்ரேட்டு நான்குநீரேற்று
| |
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சி-1,2,3-புரோப்பேன்-டிரைகார்பாக்சிலிக் அமில கால்சியம் உப்பு (2:3)
| |
| வேறு பெயர்கள்
ஐ333, டிரைகால்சியம் டைசிட்ரேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 813-94-5 5785-44-4 (நான்குநீரேற்று) | |
| ChEBI | CHEBI:190513 |
| ChEMBL | ChEMBL2106123 |
| ChemSpider | 12584 |
| DrugBank | DB11093 |
| EC number | 212-391-7 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 13136 |
| |
| UNII | 86117BWO7P MLM29U2X85 (tetrahydrate) |
| பண்புகள் | |
| Ca3(C6H5O7)2 | |
| வாய்ப்பாட்டு எடை | 498.4334 கி/மோல் (நீரிலி) 570.4945 கி/மோல் (நான்குநீரேற்று) |
| தோற்றம் | வெண் தூள் |
| மணம் | நெடியற்றது |
| அடர்த்தி | 1.63 கி/செ.மீ3 (நீரிலி) 2.00 கி/செ.மீ3 (நான்குநீரேற்று)[1] |
| உருகுநிலை | சிதையும் |
| கொதிநிலை | சிதையும் |
| 0.85 கி/லி (18 °செல்சியசு) 0.95 கி/லி (25 °செல்சியசு) | |
| கரைதிறன் | எத்தனாலில் கரையும் |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | முச்சாய்வு (நான்குநீரேற்று) |
| புறவெளித் தொகுதி | P1, No. 2 |
| Lattice constant | a = 0.59466(4) நானோமீட்டர், b = 1.02247(8) நானோமீட்டர், c = 1.66496(13) நானோமீட்டர் |
படிகக்கூடு மாறிலி
|
|
| தீங்குகள் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் சிட்ரேட்டு இசுட்ரோன்சியம் சிட்ரேட்டு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
கால்சியம் சிட்ரேட்டு (Calcium citrate) என்பது Ca3(C6H5O7)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிட்ரிக் அமிலத்தின் கால்சியம் உப்பான இச்சேர்மம் பொதுவாக ஐ333 என்ற ஐரோப்பிய ஒன்றிய எண் அடையாளத்துடன் ஓர் உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பாக்காகவும், சில நேரங்களில் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையில், இச்சேர்மம் சோடியம் சிட்ரேட்டைப் போன்றதாகும். உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்தை வழங்கும் சிட்ராகல் போன்ற கால்சியம் கூடுதல் உணவுகளிலும் கால்சியம் சிட்ரேட்டு காணப்படுகிறது. நீரற்ற கால்சியம் சிட்ரேட்டில் கால்சியம் 24.1% அளவிலும் நான்கு நீரேற்று கால்சியம் சிட்ரேட்டில் 21.1% அளவிலும் உள்ளது. நான்கு நீரேற்று இயற்கையில் எர்லாண்டைட்டு என்ற கனிமமாக காணப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]பூஞ்சை நொதித்தல் செயல்முறையிலில் தொழிற்சாலை முறையில் சிட்ரிக் அமிலத்தை தயாரிக்கும்போது ஓர் இடைநிலை வேதிப்பொருளாக கால்சியம் சிட்ரேட்டு கிடைக்கிறது.[2] குழம்பு கரைசலாக உள்ள சிட்ரிக் அமிலம் சுண்ணாம்பு நீரால் நடுநிலையாக்கப்பட்டு, கரையாத கால்சியம் சிட்ரேட்டை வீழ்படிவாகிறது. பின்னர் இது குழம்பின் மீதமுள்ள பகுதியிலிருந்து வடிகட்டப்பட்டு கழுவப்பட்டு சுத்தமான கால்சியம் சிட்ரேட்டைக் கொடுக்கிறது.
- 3 Ca(OH)2(s) + 2 C6H8O7(l) → Ca3(C6H5O7)2(s) + 6 H2O(l)
வேதிப் பண்புகள்
[தொகு]கால்சியம் சிட்ரேட்டு தண்ணீரில் குறைவாகவே கரையும். ஊசி வடிவ படிகங்களான டிரைகால்சியம் டைசிட்ரேட்டு நான்குநீரேற்று [Ca3(C6H5O7)2(H2O)2]·2H2O ஆகியவை நீர்வெப்பத் தொகுப்பு மூலம் பெறப்படுகின்றன. இந்த படிக அமைப்பு ஒரு முப்பரிமாண வலையமைப்பைக் கொண்டுள்ளது, இதில் எட்டு மடங்கு ஒருங்கிணைந்த Ca2+ நேர்மின் அயனிகள் இரண்டு ஒருங்கிணைக்கப்படாத படிக நீர் மூலக்கூறுகளுக்கும் இரண்டு ஒருங்கிணைக்கும் நீர் மூலக்கூறுகளுக்கும் இடையில் சிட்ரேட்டு எதிர்மின் அயனிகள் மற்றும் ஐதரசன் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன.[1]
உடலில் கிடைக்கும் அளவு
[தொகு]பல நபர்களிடத்தில் கால்சியம் சிட்ரேட்டின் உடலில் கிடைக்கும் தன்மை மலிவான கால்சியம் கார்பனேட்டின் (CaCO3) உடலில் கிடைக்கும் தன்மைக்கு சமமாகக் காணப்படுகிறது.[3] கால்சியம் கார்பனேட்டு கால்சியம் சிட்ரேட்டை விட சீரணிக்க கடினமானதாகும்.[4] அமில எதிர்ப்பு மருந்துகளுக்கு உணர்திறன் உள்ளவர்கள் அல்லது போதுமான வயிற்று அமிலத்தை உற்பத்தி செய்வதில் சிரமம் உள்ளவர்கள், கால்சியம் கார்பனேட்டை விட கால்சியம் சிட்ரேட்டை கூடுதல் உணவாகத் தேர்வு செய்யலாம்.
இரைப்பை புறவழி அறுவை சிகிச்சைக்குப் பிறகு கால்சியம் உறிஞ்சுதல் குறித்த 2009 ஆம் ஆண்டு ஆராய்ச்சியின் படி,[5] அறுவை சிகிச்சைக்குப் பிறகு கால்சியம் சிட்ரேட்டை உணவு நிரப்பியாக எடுத்துக் கொள்ளும் உரூக்சு-என்-ஒய் இரைப்பை புறவழி நோயாளிகளில் கால்சியம் சிட்ரேட்டு கால்சியம் கார்பனேட்டை விட உடலில் கிடைக்கும் தன்மை மேம்படுகிறது. முக்கியமாக இந்த நபர்களின் செரிமானப் பாதையில் கால்சியம் உறிஞ்சுதல் எங்கு நிகழ்கிறது என்பது தொடர்பான மாற்றங்களால் இது ஏற்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Herdtweck, Eberhardt; Kornprobst, Tobias; Sieber, Roland; Straver, Leo; Plank, Johann (2011). "Crystal Structure, Synthesis, and Properties of tri-Calcium di-Citrate tetra-Hydrate [Ca3(C6H5O7)2(H2O)2]·2H2O". Zeitschrift für anorganische und allgemeine Chemie 637 (6): 655–659. doi:10.1002/zaac.201100088.
- ↑ "Use of Lime in the Chemical Industry". National Lime Association. Archived from the original on 2006-09-29. Retrieved 2006-11-25.
- ↑ "Absorbability and cost-effectiveness in calcium supplementation". Journal of the American College of Nutrition 20 (3): 239–46. 2001. doi:10.1080/07315724.2001.10719038. பப்மெட்:11444420.
- ↑ "What you need to know about calcium". Harvard Health Publications. 9 June 2009. Retrieved 4 August 2014.
- ↑ "Comparison of the Absorption of Calcium Carbonate and Calcium Citrate after Roux-en-Y Gastric Bypass". Obesity Surgery 19 (9): 1256–1261. June 2009. doi:10.1007/s11695-009-9850-6. பப்மெட்:19437082.