கால்சியம் அலுமினோ சிலிக்கேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் அலுமினோ சிலிக்கேட்டு
இனங்காட்டிகள்
37342-39-5
EC number 253-476-9
UNII 98139KV0X6
பண்புகள்
CaAl2Si2O8
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கால்சியம் அலுமினோ சிலிக்கேட்டு (Calcium aluminosilicate) என்பது CaAl2Si2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் நேர்மின் அயனிகளைக் கொண்ட அலுமினோ சிலிக்கேட்டு சேர்மம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. [1] கனிமங்களில் பெல்டுசுபார் கனிமத்தைப் போல இதுவும் அக்கனிமத்தின் பிளாகியோகிளேசு கனிமத் தொடரின் இறுதி கனிமமாக அனார்தைட்டு கனிமம் கண்டறியப்பட்டது.

ஒர் உணவு சேர்க்கைப் பொருளாக இது சிலவேளைகளில் ஐ556 என்ற ஐரோப்பிய ஒன்றிய எண்ணால் அடையாளப்படுத்தப்படுகிறது. இரண்டு சதவீதத்திற்கும் குறைவாக, மேசை உப்பு கட்டியாக்கலை எதிர்க்கும் முகவர், மற்றும் வெண்ணிலா தூளில் ஓர் உட்கூறு என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அறியப்பட்டுள்ளது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Compound Summary for CID 21881395 - Calcium Aluminosilicate". PubChem.