கால்சியம் அலுமினேட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியமஅலுமினேட்டுகள் நிலைத்தன்மை வரைபடம்
டோடெக்காகால்சியம் எப்டா-அலுமினேட்டின் படிகக் கட்டமைப்பு, 12CaO•7Al2O3 (C12A7)[1]

கால்சியம் அலுமினேட்டுகள் (Calcium aluminates ) என்பவை கால்சியம் ஆக்சைடையும் அலுமினியம் ஆக்சைடையும் ஒன்றாகச் சேர்த்து உயர் வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் உண்டாகும் வேதிப்பொருட்களாகும்[2]. சிமெண்ட்டு மற்றும் எளிதுருகா பொருட்கள் உற்பத்திகளில் இவை பயன்படுகின்றன.

வளிமண்டலத்தின் சாதாரண ஈரப்பதத்தில் வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் நிலைப்புத்தன்மை கட்டங்கள் நிலைத்தன்மை வரைபடத்தில் காட்டப்பட்டு்ள்ளன :

 • டிரைகால்சியம் அலுமினேட்டு, 3CaO•Al2O3 (C3A)
 • டோடெக்காகால்சியம் எப்டா அலுமினேட்டு, 12CaO•7Al2O3 (C12A7) (மேயினைட்டு)
 • மோனோகால்சியம் அலுமினேட்டு, CaO•Al2O3 (CA)
 • மோனோகால்சியம் டையலுமினேட்டு, CaO•2Al2O3 (CA2)
 • மோனோகால்சியம் எக்சா அலுமினேட்டு, CaO•6Al2O3 (CA6)

கூடுதலாக பிற நிலைமைக்ளில் இவையும் உள்ளடங்குகின்றன.

 • டைகால்சியம் அலுமினேட்டு, 2CaO•Al2O3 (C2A), 2500 மெகாபாசுக்கல் அழுத்தத்திற்கு மிகுதியான நிலையில் மட்டும் இவை காணப்படுகின்றன. [3] இப்படிகம் செஞ்சாய்சதுரப் படிகமாக அடர்த்தி 3480 கி.கி•மீ−3 அளவைக் கொண்டுள்ளது.
 • [[பென்டாகால்சியம் டிரையலுமினேட்டு, நீரும் ஆக்சிசனும் அற்ற சூழலில் மட்டும் உருவாகிறது. இப்படிகம் செஞ்சாய்சதுரப் படிகமாக அடர்த்தி 3067 கி.கி•மீ−3 அளவைக் கொண்டுள்ளது. தண்ணிருடன் இது வினைபுரிகிறது.
 • டெட்ராகால்சியம் அலுமினேட்டு, 4CaO•3Al2O3 (C4A3), சிற்றுருதி நிலையைக் கொண்டுள்ள இது is a metastable phase formed by dehydrating 4CaO•3Al2O3•3H2O இன் நீர்நீக்க வினையால் உருவாகிறது. (C4A3H3).

மேற்கோள்கள்[தொகு]

 1. name=hosono>Hosono, H.; Tanabe, K.; Takayama-Muromachi, E.; Kageyama, H.; Yamanaka, S.; Kumakura, H.; Nohara, M.; Hiramatsu, H. et al. (2015). "Exploration of new superconductors and functional materials, and fabrication of superconducting tapes and wires of iron pnictides". Science and Technology of Advanced Materials 16 (3): 033503. doi:10.1088/1468-6996/16/3/033503. பப்மெட்:27877784. Bibcode: 2015STAdM..16c3503H. 
 2. Taylor H.F.W (1990) Cement Chemistry, Academic Press, ISBN 0-12-683900-X, pp. 34–38.
 3. Taylor H.F.W (1990) Cement Chemistry, Academic Press, ISBN 0-12-683900-X, pp. 28, 29.