கால்சியம் அமோனியம் நைட்ரேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கேன்
| |
இனங்காட்டிகள் | |
15245-12-2 | |
ChEBI | CHEBI:91238 |
பண்புகள் | |
மாறுபடும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கால்சியம் அமோனியம் நைட்ரேட்டு (Calcium ammonium nitrate) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு கனிம உரமாகும். இது நைட்ரோ-சுண்ணாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில் உலகளவில் பயன்படுத்தப்பட்ட அனைத்து நைட்ரசன் உரங்களிலும் 4 சதவீதம் கால்சியம் அமோனியம் நைட்ரேட்டு உரமாகும் [1].
தயாரிப்பு
[தொகு]கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு என்ற சொல் பல வேறுபட்ட ஆனால் நெருக்கமாக தொடர்புடைய வாய்ப்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தூளாக்கப்பட்ட சுண்ணாம்புக் கல்லுடன் அமோனியம் நைட்ரேட்டு சேர்மத்தை சேர்த்து வினைபுரியச் செய்து கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு சேர்மத்தின் ஒரு வகை தயாரிக்கப்படுகிறது [1]:{{{3}}}[2]:{{{3}}}. கால்சியம் நைட்ரேட்டு மற்றும் அமோனியம் நைட்ரேட்டு சேர்மங்களின் கலவையை தண்ணீரில் கரைத்து தயாரிக்கும் முறை மற்றொரு தயாரிப்பு முறையாகும். இம்முறை முழுமையாக நீரில் கரைதல் என்ற அடிப்படையில் உருவாகும் ஒரு முறையாகும். இம்முறையில் 5Ca(NO3)2•NH4NO3•10H2O என்ற நீரேறிய இரட்டை உப்பாக இச்சேர்மம் படிகமாகிறது:[3]. அமோனியம் நைட்ரேட்டு சேர்மத்தை போல அல்லாமல் கால்சியம் தனிமத்தை கொண்டிருக்கும் இத்தகைய சேர்மங்கள் அமெரிக்காவின் போக்குவரத்துத் துறையினால் ஆக்சிசனேற்றிகளாக வகைப்படுத்தப்படுத்துவதில்லை[4] these calcium containing formulations are not classified as oxidizers by the United States Department of Transportation.[3]:{{{3}}}.
கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு சேர்மத்தின் நுகர்வு 1973/74 ஆம் ஆண்டில் 3.54 மில்லியன் டன், 1983/84 ஆம் ஆண்டில் 4.45 மில்லியன் டன், 1993/94 ஆம் ஆண்டில் 3.58 மில்லியன் டன் என்ற அளவுகளில் இருந்தது [5]:{{{3}}}. கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டின் உற்பத்திக்காக 2003 ஆம் ஆண்டு உலகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அமோனியாவில் 3 சதவீதம் பயன்படுத்தப்பட்டது [5]:{{{3}}}.
இயற்பியல் பண்புகள்
[தொகு]கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு ஓர் நீருறிஞ்சும் சேர்மமாகும். நீரில் இச்சேர்மம் கரையும் வினையானது வெப்பம் கொள்ளும் வினையாகும். இதன் காரணமாக இச்சேர்மத்தை சில உடனடி குளிர் பொதிகளில் பயன்படுத்த இயல்கிறது.
பயன்கள்
[தொகு]பெரும்பாலான கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு சேர்மம் உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. உரம் தரத்திற்கு பயன்படும் கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டில் சுமார் எட்டு சதவீதம் கால்சியமும் 21முதல் 27 சதவீதம் நைட்ரசனும் கலந்திருக்கும்[6]:{{{3}}}. பல பொதுவான நைட்ரசன் உரங்களை விட மண்ணை அமிலமாக்குவதில் கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டின் பங்கு அதிகமாக இருப்பதால்[6] அமில மண்ணில் பயன்படுத்த இச்சேர்ம்ம் அதிகமாக விரும்பப்படுகிறது[5]. அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்[2].
கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டை நீர் நிரப்பப்பட்ட சில கையடக்க நெகிழிப் பைகளில் குளிர் பொதியாக பயன்படுத்துகிறாகள். இந்த பொதிகள் பொதுவாக சிறிய குளிரூட்டிகளில் உணவை குளிர்ச்சியாக வைத்திருக்க அல்லது சிறிய காயங்களின் வலியைப் போக்க அல்லது போக்குவரத்தின் போது தயாரிப்புகளை குளிர்ச்சியாக வைத்திருக்க பயன்படுத்தப்படுகின்றன.
கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு நன்றாக மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் என்பது வழக்கமான இராணுவ நடவடிக்கையைத் தவிர வேறு வழிகளில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு குண்டு ஆகும். இது வெடிக்கும் பொறிமுறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். நேரடியாகப் பயன்படுத்தப்படுவதற்கு மாறாக கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு முதலில் அமோனியம் நைட்ரேட்டாக மாற்றப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படுகிறது. ஆப்கானிசுதானில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களில் வீட்டில் உருவாக்கப்பட்ட வெடிபொருட்கள் உள்ளன. அவற்றில் 70 சதவீதம் கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டிலிருந்து பெறப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டு சேர்த்து தயாரிக்கப்படுகின்றன[7]. வெடிபொருட்களை தயாரிக்க தீவிரவாதிகள் இதைப் பயன்படுத்தியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து மலாக்கண்ட் பிரிவிலும் ஆப்கானிசுதானிலும் கால்சியம் அமோனியம் நைட்ரேட்டு மற்றும் பிற உரங்கள் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டன[8]. இந்த தடைகள் காரணமாக, தீப்பிடிக்க உதவும் பொருளான பொட்டாசியம் குளோரேட்டு கிளர்ச்சியாளர்களுக்கு உரத்தையும் மிஞ்சி வெடிபொருளுக்கான தேர்வாக மாறிவிட்டது[9].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Smil, Vaclav. Enriching the Earth. Massachusetts Institute of Technology. p. 135.
- ↑ 2.0 2.1 United Nations Industrial Development Organization (1998). Fertilizer Manual. Netherlands: Kluwer Academic.
- ↑ 3.0 3.1 Yara Calcinit Technical Data[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 172.101 Hazardous Materials Table
- ↑ 5.0 5.1 5.2 Maxwell, Gary R. (2004). Synthetic Nitrogen Products. Kluwer Academic.
- ↑ 6.0 6.1 Australian Soil Fertility Manual. Fertilizer Industry Federation of Australia. 2006.
- ↑ Indiana nitrogen fertilizer plant on hold over link to bombs in Afghanistan
- ↑ Brummit, Chris. "Pakistani fertilizer fuels Afghan bombs, US troop deaths". NBC. பார்க்கப்பட்ட நாள் 3 May 2013.
- ↑ Potassium chlorate — the stuff that makes matches catch fire — has surpassed fertilizer as the explosive of choice for insurgents.