கால்குளோசைட்டு
கால்குளோசைட்டுCalclacite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Ca(CH3COO)Cl•5H2O |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு |
மோவின் அளவுகோல் வலிமை | 1.5 |
மிளிர்வு | பட்டு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 1.5 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.468 nβ = 1.484 nγ = 1.515 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.047 |
2V கோணம் | அளக்கப்பட்ட்து 80°, கணக்கிடப்பட்ட்து: 74° |
நிறப்பிரிகை | வலுக்குறைந்த்து |
மேற்கோள்கள் | [1] |
கால்குளோசைட்டு (Calclacite) என்பது CH3COO2− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் மற்றும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் (Ca2+), குளோரின் (Cl−), அசிட்டேட்டு (CH3COO2−) என்ற சொற்களின் முதல் சில எழுத்துகளைச் சேர்த்து இக்கனிமத்தின் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.
பண்புகள்
[தொகு]பட்டு முடிகள் பூப்பது போல 4 செ.மீ நீளத்திற்கு ஒற்றைச்சரிவச்சுப் படிகங்களாக கால்குளோசைட்டு படிகமாகிறது. கால்குளோசைட்டு கனிமம் ஒரு கரிம அமில உப்பு என்று நிக்கல் சிடரன்சு வகைப்பாடு கூறுகிறது. பார்மிகெய்ட்டு, அசிட்டமைடு, தாசுகோவைட்டு, பேய்சைட்டு, ஓகானைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து இயற்கையில் தோன்றுகிறது.[2]. மோவின் அளவு கோலில் வெண்மை நிறமுடைய இக்கனிமத்தின் கடினத்தன்மை மதிப்பு 1.5 ஆகும்.
தோற்றம்
[தொகு]பாறைகள், புதை படிவுகள், பீங்கான் துண்டுகள் ஆகியவற்றின் மீது கால்குளோசைட்டு தோன்றுகிறது. அலமாரிகளின் ஓக் மரத் துண்டுகள் உற்பத்தி செய்யும் அசிட்டிக் அமிலாத்தின் செயல்பாட்டால் இம்மாற்றம் நிகழ்கிறது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mindat
- ↑ 2.0 2.1 "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.