காலும்மா சராதானென்சசு
தோற்றம்
| காலும்மா சராதானென்சசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | காலும்மா
|
| இனம்: | கா. சராதானென்சசு
|
| இருசொற் பெயரீடு | |
| காலும்மா சராதானென்சசு பிரைகூ & தோமெர்கு, 1967 | |
காலும்மா சராதானென்சசு (Calumma vatosoa) என்பது கெமேலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பச்சைநிறப் பச்சோந்தி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]
வாழிடம்
[தொகு]மடகாசுகரின் மிக உயரமான மலையான சராதானா மலைத்தொடரிலிருந்து மட்டுமே காலும்மா சராதானென்சசு அறியப்படுகிறது. இது தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது எரிகோயிட் புதர்கள் சுற்றுச்சூழல் பகுதியில் 2,500 முதல் 2,850 மீட்டர் உயரத்திற்கு இடையில் உள்ள உயரமான வெப்பமண்டல பகுதியில் வாழ்கிறது. இதன் ஆக்கிரமிப்பு பகுதி நன்கு அறியப்படவில்லை. சராதானா மலைத்தொடரின் பரப்பளவு 492 சதுர கிலோ மீட்டர் ஆகும். ஆனால் பச்சோந்தியின் பரவல் தூரம் 100 சதுர கிலோ மீட்டருக்கும் குறைவாக உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Jenkins, R.K.B.; Andreone, F.; Andriamazava, A.; Anjeriniaina, M.; Brady, L.; Glaw, F.; Griffiths, R.A.; Rabibisoa, N. et al. (2011). "Calumma tsaratananense". IUCN Red List of Threatened Species 2011: e.T172760A6912778. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T172760A6912778.en. https://www.iucnredlist.org/species/172760/6912778. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Calumma tsaratananense at the Reptarium.cz Reptile Database