காலும்மா இரத்னாசாரியா
தோற்றம்
| காலும்மா இரத்னாசாரியா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | காலும்மா |
| இனம்: | கா. இரத்னாசாரியா |
| இருசொற் பெயரீடு | |
| காலும்மா இரத்னாசாரியா புரோட்செல், செர்சு, இராட்சோவினா, வென்சசு, & கிளாவ், 2020 | |
காலும்மா இரத்னாசாரியா (Calumma ratnasariae) என்பது கெமேலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பச்சைநிறப் பச்சோந்தி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] காலும்மா இரத்னாசாரியா என்பது மடகாசுகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெலனானா மாவட்டத்தில் பிரத்தியேகமாக காணப்படும் பச்சோந்தி சிற்றினமாகும். இதன் வாழ்விடமானது தெற்கு பிரதேசத்தில் உள்ள அனலாபே வனப்பகுதியிலிருந்து ஆண்ட்ரேவோரோவோ வரை உள்ளது.[2] மடகாசுகரில் வகைப்பாட்டியல் ஆராய்ச்சி, இயற்கை பாதுகாப்பு திட்டங்களுக்கான யூலியா இரத்னாசாரியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இச்சிற்றினத்திற்கு இரத்னாசாரியின் பெயரிடப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Calumma ratnasariae at the Reptarium.cz Reptile Database. Accessed 2018-10-31.
- 1 2 "Calumma ratnasariae". The Reptile Database. Retrieved 2024-03-24.