உள்ளடக்கத்துக்குச் செல்

காலி மணிக்கூட்டுக் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலி மணிக்கூட்டுக் கோபுரம்

காலி மணிக்கூட்டுக் கோபுரம் (Galle Clock Tower) (அல்லது அந்தோனிசு நினைவு மணிக்கூட்டுக் கோபுரம்) என்பது இலங்கையின் காலியிலுள்ள காலிக் கோட்டைக்குள் அமைந்துள்ளது. இந்த மணிக்கூட்டுக் கோபுரம் ஒரு பிரபலமான அடையாளமாகும். மேலும் கோட்ட்டையின் முன்னாள் பாதுகாப்பு அறையின் தளத்தில், மத்தியக் கொத்தளத்தை நோக்கியபடி நிற்கிறது. இலங்கையின் மருத்துவர் பீட்டர் அந்தோனிசை அங்கீகரிக்கும் விதமாக காலி மக்களால் நிதி திரட்டப்பட்டு இது 1883 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. [1] இது ஜான் ஹென்றி கியூஸ் லாண்டனின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த கடிகாரம் ஒரு நன்றியுள்ள நோயாளியான முதலியார் சாம்சன் டி அப்ரூ ராஜபக்சேவின் பரிசாகும். [2]

கடிகாரக் கோபுரம் ஒரு கல்வெட்டைக் கொண்டுள்ளது:

"இந்த கோபுரம் பீட்டர் டேனியல் அந்தோனிசின் என்பவர் (காலியில் பிறந்தவர்) மனிதனின் துன்பங்களை நிவர்த்தி செய்வதில் அவரது திறமை மற்றும் கருணைக்கு சான்றாக பொது சந்தா மூலம் அமைக்கப்பட்டது. MDCCCLXXXIII ".

மருத்துவர் அந்தோனிசு (1822-1903) ஒரு புகழ்பெற்ற பரங்கிய மருத்துவர் ஆவார். இவர் இலங்கையின் தென் மாகாணத்திற்கான காலனித்துவ அறுவை சிகிச்சை நிபுணராகவும், இலங்கை சட்டவாக்கப் பேரவையின் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். [3]

இந்த கோபுரம் சுமார் நான்கு மாடி உயரத்தில் (25.3 மீ (83 அடி) கோட்டை கோபுரங்களுக்குள் நுழைந்தவுடன் அமைந்துள்ளது. [2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ceylon in the Jubilee Year. Asian Educational Services.
  2. 2.0 2.1 "Galle Clock Tower". Galle Heritage Foundation. Archived from the original on 7 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.
  3. Roberts, Norah (1993). Galle as quiet as asleep. University of Michigan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789559557906.