காலிஸ்தான் விடுதலைப் படை
காலிஸ்தான் விடுதலைப் படைகள் | |
---|---|
![]() சின்னம் | |
நிறுவனர் | அரூர் சிங் |
தலைவர்கள் | அரூர் சிங் (தூக்கிலிடப்பட்டார்) (1986–1987) அவதார் சிங் பிரம்மா (1987–1988) குர்சந்த் சிங் புத்திசிங்வாலா (1988–1992) நவ்ரூப் சிங் தோதியான் (1992) நவநீத் சிங் காதியான் (1992–1994) பிரிதம் சிங் சேகான் (1994–1998) ஹர்மந்திர் சிங் நிகாங் (2008–2018) ஹர்மீத் சிங் (2014–2020) அவதார் சிங் காந்தா (2020–2023) |
செயல்பாட்டுக் காலம் | 1986 – தற்போது வரை |
நோக்கங்கள் | சீக்கிய நாடு உருவாக்குதல் |
சித்தாந்தம் | பிரிவினைவாதம் |
குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் | பஞ்சாப் கிளர்ச்சி |
நிலை | செயல்பாட்டில் |
வரும்படிகள் | புலம்பெயர்ந்த சீக்கியர்கள் |
தீவிரவாத அமைப்பாக அறிவித்தது | |
![]() |
காலிஸ்தான் விடுதலைப் படை (Khalistan Liberation Force (சுருக்கமாக:KLF), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாகக் கோரி கிளர்ச்சி செய்யும் காலிஸ்தானிகளின் தீவிரவாத இயக்கம் ஆகும். இந்த இயக்கத்தை இந்திய அரசு தடை செய்துள்ளது.[1]இதனால் காலிஸ்தான் விடுதலைப் படையின் உறுப்பினர்கள் பெரும்பாலும் கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
வரலாறு
[தொகு]1984ல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த பிந்தரன் வாலே மற்றும் அவர்தம் கூட்டத்தினரை வெளியேற்றுவதற்காக இந்திய அரசு புளூஸ்டார் நடவடிக்கை எடுத்ததது. இதனை அடுத்து 1986ஆம் ஆண்டில் அரூர் சிங் தலைமையில் பஞ்சாப் தனி நாடு கோரும் காலிஸ்தான் விடுதலைப் படை நிறுவப்பட்டது.
1980 மற்றும் 1990களில் காலிஸ்தான் விடுதலைப் படையின் தீவிரவாதிகள், காஷ்மீர் தனி நாடு கோரும் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து இந்தியாவில் பல குண்டி வெடிப்புகளை நடத்தியது.[2][3][4]1991ஆண்டில் காலிஸ்தான் விடுதலைப்படையினர், ருமோனியாவிற்கான இந்தியத் தூதுவர் ஜுலியோ பிரான்சிஸ் ரிபெய்ரோவை புக்கரெஸ்ட் நகரத்திலிருந்து கடத்திக் கொலை செய்தனர்.[5]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Govt bans Khalistan Liberation Force". The Economic Times. 2018-12-27. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/govt-bans-khalistan-liberation-force/articleshow/67275538.cms.
- ↑ "Bus explosion in India kills at least 14", CNN, 22 May 1996
- ↑ "Fatal bomb meant to disrupt Kashmiri elections", CNN, 21 Apr 1996
- ↑ Office of the Coordinator for Counterterrorism (April 1996). "1995 Patterns of Global Terrorism". fas.org. Retrieved 2009-05-30.
- ↑ "World Notes India", Time magazine, 21 Oct 1991.