உள்ளடக்கத்துக்குச் செல்

காலியம் ஆர்சனைடு பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலியம் ஆர்சனைடு பாசுபைடு (Gallium arsenide phosphide) என்பது (GaAs1-xPx) என்ற பொது வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு குறைக்கடத்தி பொருளாகும். காலியம் ஆர்சனைடும் காலியம் பாசுபைடும் சேற்ந்து ஒரு கலப்புலோகமாக இது உருவாகிறது. இதன் வாய்ப்பாட்டில் உள்ள x என்ற பின்னத்தால் குறிப்பிடப்படும் பல்வேறு விகிதங்களில் கலந்துள்ளது.

சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஒளி-உமிழும் இருமுனையங்களை உற்பத்தி செய்ய காலியம் ஆர்சனைடு பாசுபைடு பயன்படுத்தப்படுகிறது. GaP/GaAsP பல்லினக் கட்டமைப்பை உருவாக்க இக்கலப்புலோகம் பெரும்பாலும் காலியம் பாசுபைடு அடி மூலக்கூறுகளில் வளர்க்கப்படுகிறது. மின்னணு பண்புகளை மாற்றியமைப்பதற்காக நைட்ரசனுடன் (GaAsP:N) கலந்து இது உருவாக்கப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tadashige Sato and Megumi Imai (2002). "Characteristics of Nitrogen-Doped GaAsP Light-Emitting Diodes". Japanese Journal of Applied Physics 41: 5995–5998. doi:10.1143/JJAP.41.5995.