உள்ளடக்கத்துக்குச் செல்

காலாபானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கார்வால் மற்றும் குமாவுன் பகுதிகள்
சிஐஏ வரைபடத்தில்,இந்தியாவின் பகுதியாக காலபானி பிரதேசம் எனக்குறிப்பிட்ட வரைபடம்

காலபானி பிரதேசம் (Kalapani territory) இந்தியாவின் வடக்கில் இமயமலையில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டத்தின் வடகிழக்கில் திபெத், நேபாளம் எல்லையை ஒட்டியுள்ள இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதி இமயமலையில் 6180 மீட்டர் உயரத்தில் உள்ளது. நேபாளம் இப்பகுதியை தனதென உரிமை கோருகிறது.[1][2] நேபாளம் தனது மாநில எண் 7-இல் உள்ள தார்ச்சுலா மாவட்டத்தின் ஒரு பகுதியாக காலபானி பிரதேசம் என உரிமை கோருகிறது.[3] இங்கு சாரதா ஆறு பாய்கிறது.

இந்தியாவின் காலாபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலெக் கணவாய் பகுதிகளை, நேபாள நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் நேபாளத்தில் வரைபடத்தில் இணைத்துள்ளதற்கு, இந்தியா கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.[4][5]

கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரிக்கு புனிதப் பயணம் மேற்கொள்தற்கு வசதியாக, காலாபானி சமவெளியில் எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு, காலாபானி சமவெளி வரை சாலைகள் அமைத்துள்ளனர். இதனால் உத்தரகாண்ட் மாநிலத்தின் தார்ச்சுலா, காலாபானி சமவெளி மற்றும் லிபுலெக் கணவாய் கயிலைப் பயணத்தை, குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் எளிதிதாக மேற்கொள்ள முடியும்.

35 சதர கிலோ பரப்பளவு கொண்ட காலாபானி எல்லைப்புற சமவெளிப் பகுதியை இந்திய - திபெத் எல்லைக் காவல்படை காவல் செய்கிறது.[6]

வரலாறு

[தொகு]

1815-இல் நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போருக்குப் பின் நேபாள இராச்சியம் மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 4 மார்ச் 1816-இல் செய்து கொண்ட சுகௌலி உடன்படிக்கையின் படி[7], தற்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டம் மற்றும் குமாவுன் கோட்டம், மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டம் உள்ளிட்ட வடக்குப் பகுதிகள் மற்றும் சிக்கிம் பகுதிகள் பிரித்தானிய இந்தியாவுக்கு விட்டுத் தரப்பட்டது.[7] இந்நிலையில் தற்போது மே 2020-இல் நேபாள நாடு, காலாபானி, லிபுலெக் கணவாய் மற்றும் லிம்பியாதுரா பகுதிகளை தனது நாட்டின் பகுதிகளாக காட்டி புதிய வரைபடம் ஒன்று வெளியிட்டதை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.[8][9][10] காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதிகள் இந்தியாவின் பிதௌரகட் மாவட்டத்திற்கு உரியது என பழைய நில ஆவணங்களை இந்தியா வெளியிட்டுள்ளது.[11]

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shukla, Srijan (11 November 2019). "Why Kalapani is a bone of contention between India and Nepal". ThePrint. பார்க்கப்பட்ட நாள் 20 May 2020.
  2. "Why Nepal is angry over India's new road in disputed border area". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 20 May 2020.
  3. Shukla, Srijan (11 November 2019). "Why Kalapani is a bone of contention between India and Nepal". ThePrint. https://theprint.in/theprint-essential/why-kalapani-is-a-bone-of-contention-between-india-and-nepal/317926/. 
  4. நேபாள வரைபடத்தில் இந்தியப் பகுதிகள்
  5. நேபாள வரைபடத்தில் இந்தியப் பகுதிகள்:இந்தியா எதிர்வினை
  6. "Why Kalapani is crucial and the Chinese threat should not be taken lightly". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 9 August 2017. பார்க்கப்பட்ட நாள் 3 January 2020. Kalapani is a 35 square kilometre area in the hill state's Pithoragarh district under control of Indo Tibetan Border Police.
  7. 7.0 7.1 Treaty of Sugauli
  8. Nepal officially releases new controversial map, shows Indian territories of Lipulekh, Kalapani, Limpiyadhura as its own
  9. எல்லைக்கு உரிமை கொண்டாட வேண்டாம்: நேபாள அரசுக்கு இந்தியா எச்சரிக்கை
  10. இந்திய பகுதிகளுக்கு உரிமைகோரும் நேபாளம்; எல்லைக்கு படைகளை அனுப்பியது
  11. காலாபானி,லிபுலெக் இந்தியாவின் பகுதி தான்: நில ஆவணங்களை உறுதி செய்து இந்தியா அறிவிப்பு

ஆதாரகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலாபானி&oldid=3742793" இலிருந்து மீள்விக்கப்பட்டது