காலவரிசை ஒத்திசைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காலவரிசை ஒத்திசைவு (Chronological synchronism) என்பது இரண்டு காலவரிசைகளை இணைக்கும் நிகழ்வு ஆகும். உதாரணமாக, எகிப்தியலில் அடித்தள எகிப்திய காலவரிசை காலத்திற்கு இந்த ஒத்திசைவு பயன்படுத்தப்படுகிறது. காலவரிசை ஒத்திசைவுகளின் முக்கிய வகைகள் பிற வரலாற்றுக் காலவரிசை மற்றும் சாியான புள்ளிவிவர அடிப்படையில் அமைந்த வானியல் நிகழ்வுகள் ஆகியவை ஆகும்.

ஏனைய காலவரிசைகளுடனான ஒத்திசைவுகள் பெரும்பாலும் வட்டாரங்களுக்கு இடையில் பதிவு செய்யப்பட்ட தகவலுடன் சில வடிவங்களில் சாா்ந்து இருக்கின்றன. உதாரணமாக, எகிப்தியலில், முதன்முதலில் கி.மு. 15-ம் நூற்றாண்டில், அமர்னா காலத்தின் போது, மூன்றாம் அமேனோத்தெப், அக்கினேட்டன் மற்றும் பல அண்மைக் கிழக்கு முடியரசுகளுக்கு இடையில் எகிப்திய காலவரிசை இராஜதந்திர தொடா்பு அளவில், மற்ற அருகாமையிலுள்ள கிழக்கித்திய காலவரிசைகளுடன் இணைக்கிறது.

வானியல் ஒத்திசைவுகள் நம்பத்தகுந்த வகையில் துல்லியமாக பதிவு செய்யப்பட்ட வானியல் நிகழ்வுகளில் வரலாற்று பதிவில் அடையாளம் காணப்படுகின்றன. எகிப்தின் பன்னிரண்டாவது அரசமரபின் தேதிகள் முழுமையான துல்லியத்துடன் சரி செய்யப்படலாம் என்று ரிச்சர்ட் அந்தோனி பார்க்கர் விவாதித்து, கவனமாக ஆய்வு செய்த சோத்திக் சுழற்சி இவற்றில் நன்கு அறியப்பட்டதாகும்.[1] மேலும் அண்மைய ஆய்வுகள் சோதிக் சுழற்சியில் பயன்படுத்தப்படும் பல அனுமானங்களை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Set forth in "Excursus C: The Twelfth dynasty" in his The Calendars of ancient Egypt (Chicago: University Press, 1950).
  2. One example is Patrick O'Mara, "Censorinus, the Sothic Cycle, and calendar year one in ancient Egypt: the Epistological problem", Journal of Near Eastern studies, 62 (2003), pp. 17-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலவரிசை_ஒத்திசைவு&oldid=2329213" இருந்து மீள்விக்கப்பட்டது