உள்ளடக்கத்துக்குச் செல்

காலம் பொன் போன்றது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"காலம் பொன் போன்றது" என்ற சொற்றொடர் பொறிக்கப்பட்ட, 1837 ஆம் ஆண்டு கடிகார வடிவிலான ஒரு அடையாள நாணயம்.

காலம் பொன் போன்றது (Time is money) என்பது ஒரு முதுமொழியாகும். நேரம் மிகவும் விலைமதிப்பற்றது, இழந்தால் மீண்டும் பெற முடியாது, எனவே அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் பழமொழியாகும். இது தமிழுலகில் கா. ந. அண்ணாதுரையால் காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்று குறிப்பிடப்பட்டு பிரபலமானதாகும். இப்பொன்மொழி ஜார்ஜ் ஃபிஷரின் 1748 ஆம் ஆண்டு புத்தகமான ' தி அமெரிக்கன் இன்ஸ்ட்ரக்டர்: ஆர் யங் மேன்ஸ் பெஸ்ட் கம்பேனியன் ' இல் இடம்பெற்ற பெஞ்சமின் பிராங்கிளின் எழுதிய " இளம் வர்த்தகருக்கு அறிவுரை" என்ற கட்டுரையில் தோன்றியதாகக் கூறப்படுகிறது [1], அக்கட்டுரையில் ஃபிராங்க்ளின், "நேரமே பணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்று எழுதியிருந்தார்.[2]

இருப்பினும், இந்தச் சொற்றொடர் 1719 ஆம் ஆண்டிலேயே விக் கட்சி செய்தித்தாளான தி ஃப்ரீ-திங்கரில் அச்சேறியிருந்தது: "காலமே பணம் என்று அவனது மனைவி அவனுக்குப் போதித்தது வீணாயிற்று..." [3]

ஒருவர் தான் பணிபுரியச் செலவிடும் நேரத்தின் அடிப்படையில் ஊதியம் பெறும்போது, ​​பணிபுரியாத நேரத்தைக் குறைப்பதன் மூலம், அவரின் பிற செயல்பாடுகளுக்காக வீணாகும் பணத்தை குறைக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதன் வாயிலாக, சோம்பேறித்தனத்தால் ஏற்படும் பணரீதியான இழப்பை உணர்த்துவதே இக்கூற்றின் நோக்கமாகும்

முற்றிலும் வருமானத்திற்கு அப்பாற்பட்டு, நேரத்தை செலவிடுதல் குறித்த இதே போன்ற கருத்துகள் தொன்றுதொட்டு கூறப்பட்டு வந்துள்ளன; இளைய செனெகாவின் புகழ்பெற்ற 'De Brevitate Vitae' கட்டுரை இதற்கு ஒரு சிறந்த சான்றாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ganel, Opher (2022-07-09). ""Time is Money" Doesn't Mean What You Think It Means". Medium (in ஆங்கிலம்). Retrieved 2023-02-28.
  2. Franklin, Benjamin. "Advice to a Young Tradesman, (21 July 1748)". Founders Online. National Archives and Records Administration/University of Virginia Press. Archived from the original on August 23, 2019. Retrieved November 1, 2019.
  3. The Free-Thinker, vol. III, from Lady-day to Michaelmas, 1719. London. 1723. p. 128.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலம்_பொன்_போன்றது&oldid=4588393" இலிருந்து மீள்விக்கப்பட்டது