காற்றுப் பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காற்றுப்பை பொருத்தப்பட்டுள்ள தானுந்து ஒன்று.

காற்றுப்பை (airbag) என்பது ஊர்தி விபத்து ஏற்பட்டு மோதியவுடன் பயணிகள் அல்லது ஓட்டுநர் ஆகியோரைக் காப்பாற்றும் ஓர் கருவி ஆகும்.

இவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் படத்தில் காணலாம். ஊர்தி மோதியவுடன் மோதல் உணர் கருவியில் உள்ள குண்டு வேகமாக நகர்ந்து ஒரு மின்னிணைப்பை ஏற்படுத்தி, வெடிமாத்திரைகளைப் பற்ற வைத்து, காற்றுப் பைகளை ஊதி, உயிரைக் காப்பாற்றுகிறது.

மோதல் உணர் கருவி[தொகு]

Exp.jpg

மோதல் உணர் கருவியில் உள்ள குண்டு மோதல் விசையால் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கத்த்திற்கு ஓடி மின்னிணைப்பை ஏற்படுத்துகிறது.

காற்றுப்பை செயல்படும் முறை[தொகு]

1. ஊர்தி மோதுவதற்கு முன்னர்


படம்1.jpg

2. ஊர்தி மோதிய 15 மில்லி வினாடிகளுக்குப் பிறகு, மோதல் உணர் கருவியின் மின்னிணைப்பால் பைகளில் உள்ள சிறிய வெடி மாத்திரைகள் பற்ற வைக்கப் படுகின்றன.

படம்2.jpg

3. வெடி மாத்திரைகளால் காற்றுப் பைகள் விரிவடைகின்றன.


படம்3.jpg

4. 30மி. வினாடிகளுக்குப் பிறகு, மோதலினால் முன்னுக்குச் சாயும் ஓட்டுநரின் மார்பில் காற்றுப் பைகள் தாங்கி உயிரைக் காப்பாற்றுகிறது.


படம்4.jpg

5. 40மி. வினாடிகளுக்குப் பின்னர்ப் பைகள் சுருங்கத் தொடங்குகின்றன.


படம்5.jpg

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றுப்_பை&oldid=2220036" இருந்து மீள்விக்கப்பட்டது