காற்றுக்கென்ன வேலி
காற்றுக்கென்ன வேலி | |
---|---|
இயக்கம் | புகழேந்தி தங்கராஜ் |
தயாரிப்பு | தி. வெள்ளையன் |
கதை | புகழேந்தி தங்கராஜ் |
இசை | இளையராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எம். அசோக்செல்வா |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
கலையகம் | தாய் மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 27, 2001 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காற்றுக்கென்ன வேலி (Kaatrukkenna Veli), புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதில் சுஜிதா மற்றும் சிறீமன் முக்கிய கதாபாத்திரத்திலும், குஷ்பூ, அருண் பாண்டியன், சந்திரசேகர், சுதாங்கன், சக்தி குமார், அருள்மணி, கலைராணி (நடிகை), டயானா மற்றும் பிரேமி துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப் படத்தை தி. வெள்ளையன் தயாரித்துள்ளார். இளையராஜாவின் இசை அமைப்பில் இத் திரைப்படம் ஏப்ரல் 27, 2001இல் வெளியானது.[1][2][3][4][5][6]
கதை[தொகு]
இளம்பெண்ணான மணிமேகலை (சுஜிதா) ஒரு தமிழீழ விடுதலைப் புலிகள் போராளி. இலங்கையின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள வல்வெட்டித்துறையில் நடந்த யுத்தத்தில் காலில் அடிபட்டு மிக மோசமான நிலையில் இருக்கிறாள். அங்கிருந்த போராளிகள் ஒன்று சேர்ந்து அவளை படகில் ஏற்றி இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் கோடியக்கரை (இந்தியா) வந்து அங்குள்ள தமிழர்களின் உதவியால் நாகப்பட்டினத்திலுள்ள மருத்துவமனைக்குச் சென்றனர்.
மருத்துவர் சுபாஷ் சந்திர போஸ் என்கிற சுபாஷ் (சிறீமன்), மணிமேகலைக்கு மருத்துவம் செய்வது சட்ட விரோத செயலாதலால் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர், அவளின் காயத்தைக் கண்டு அறுவைசிகிச்சை செய்ய முன்வருகிறார். ஆனால் மணிமேகலை தன் கால்களை இழக்கத் தயாராக இல்லை. அதனால் மருத்துவர்கள் ஒன்று கூடி தற்காலிகமாக அவளது காலை சரி செய்தனர். எந்த நேரத்திலும் சிகிச்சை பலனின்றி அவள் இறக்க நேரிடும். கால்களை எடுத்தால் உயிர் வாழலாம் என்கிற நிலையிலும் கூட தன் கால்களை இழக்காமல் இருக்கும் மணிமேகலை ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று மருத்துவருக்குப் புரியவில்லை. அவள் சுபாஷிடம் தன் முன்கதையை கூறுகிறாள்.
அவளது சோகமான முன்கதையை கேட்டதும் சுபாஷ், ஒரு மாதம் மருத்துவமனையில் தங்க அனுமதித்தான். இதற்கிடையில் இலங்கை அரசிடமிருந்து தமிழ்நாடு காவல்துறைக்கு போராளிகள் மருத்துவமனையில் தங்கியிருப்பதாக தகவல் வருகிறது. பின்னர் நடக்கும் சம்பவங்கள் கதையின் முடிவாக அமைகிறது.
நடிப்பு[தொகு]
- சுஜிதா - மணிமேகலை
- சிறீமன் - சுபாஷ்
- குஷ்பூ - லட்சுமி
- அருண் பாண்டியன் - போராளி
- சந்திரசேகர் - மொகமத் ஷெரிப்
- சுதாங்கன் - முரளி
- சக்தி குமார் - யோகனாதன்
- அருள்மணி - பகவதி பாண்டியன்
- கலைராணி (நடிகை) - சுபாஷின் தாய்
- டயானா - ஷிபா
- பிரேமி - மணிமேகலையின் தாய்
- பி. சுஜித்
- மு. கலைவாணன்
- லதா
- ரூபன் ஜார்ஜ் - காவல்துறை அதிகாரி
- கே. விஜயகுமார்
- பி. என். சாமிநாதன்
பாடல்கள்[தொகு]
இப் படத்திற்கு இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா; பாடல்களை எழுதியவர் சுப்பிரமணிய பாரதி.
எண் | பாடல் | பாடியவர்கள் | நேரம் |
---|---|---|---|
1 | 'ஸ்ரீ கணநாத சிந்தூர' | உமா ரமணன், சுனந்தா | 0:33 |
2 | 'தீராத விளையாட்டு பிள்ளை' | உமா ரமணன், சுனந்தா | 1:05 |
3 | 'வார்த்தை தவறி விட்டாய்' | உமா ரமணன் | 1:28 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kaatrukenna Veli (2001) Tamil Movie". spicyonion.com. 2016-10-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Kaatrukkenna Veli (2001)". gomolo.com. 2016-10-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-10-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Filmography of kaatrukkenna veli". cinesouth.com. 2004-08-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-10-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Find Tamil movie Kaatrukenna Veli". jointscene.com. 2010-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-10-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Uchithanai Mukarnthal Review". IndiaGlitz. 2011-12-16. 2016-10-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Uchithanai Mugarndhal on Dec 16". sify.com. 2011-12-08. 2016-10-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-10-11 அன்று பார்க்கப்பட்டது.