காற்றில் மிதக்கும் நீலம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காற்றில் மிதக்கும் நீலம்
நூல் பெயர்:காற்றில் மிதக்கும் நீலம்
ஆசிரியர்(கள்):சக்தி ஜோதி
வகை:கவிதை
துறை:கவிதை
இடம்:உயிர் எழுத்து பதிப்பகம்,
9, முதல் தளம்,
தீபம் வணிக வளாகம்,
கருமண்டபம்,
திருச்சி-1,
தொலைபேசி: 0431-6523099.
மொழி:தமிழ்
பக்கங்கள்:104
பதிப்பகர்:உயிர் எழுத்து பதிப்பகம்
பதிப்பு:டிசம்பர், 2011
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

காற்றில் மிதக்கும் நீலம் எனும் கவிதை நூல் டெம்மி அளவில், சர்வதேசத் தர புத்தக எண் ISBN 978-93-81099-11-7 கொண்டு 104 பக்கங்களில் திருச்சி, உயிர் எழுத்து பதிப்பகம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

தேனி மாவட்டத்திலுள்ள அனுமந்தன்பட்டி எனும் ஊரில் பிறந்து, திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் எனும் ஊரில் வசித்து வருபவர். உயிர் எழுத்து, காலச்சுவடு, தீராநதி, புதியபார்வை போன்ற இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள் அடிக்கடி இடம் பெற்று வருகின்றன.

முன்னுரை[தொகு]

இக்கவிதை நூலுக்கு திருவனந்தபுரம் சுகுமாரன் முன்னுரை எழுதியிருக்கிறார்.

உள்ளடக்கம்[தொகு]

இந்நூலில் நூலாசிரியர் எழுதிய 64 புதுக்கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.