கார உலோக நைட்ரேட்டு

கார உலோக நைட்ரேட்டுகள் (Alkali metal nitrates) என்பவை இலித்தியம், சோடியம், பொட்டாசியம், ருபீடியம், சீசியம் போன்ற கார உலோகங்கள் நைட்ரேட்டு அயனியுடன் சேர்ந்து உருவாகும் சேர்மங்களைக் குறிக்கும். இவை ஆல்கலி உலோக நைட்ரேட்டுகள் என்ற பெயராலும் அழைக்கப்படும். சோடியம் நைட்ரேட்டும் பொட்டாசியம் நைட்ரேட்டும் வணிக முக்கியத்துவம் மிக்க நைட்ரேட்டுகளாகும்[1][2]. இவை இரண்டும் வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. நீரில் கரையக்கூடிய இவ்விரு சேர்மங்களும் கிட்டத்தட்ட ஒரே அளவு உருகுநிலையைக் கொண்டுள்ளன[3]
| சேர்மம் | வேதி வாய்ப்பாடு | மோலார் நிறை | உருகுநிலை | |
|---|---|---|---|---|
| இலித்தியம் நைட்ரேட்டு | LiNO3 | 68.946 கி/மோல் | 255 ° செ (491 °F; 528 K) | |
| சோடியம் நைட்ரேட்டு | NaNO3 | 84.9947 கி/மோல் | 308 ° செ (586 °F; 581° K ) | |
| பொட்டாசியம் நைட்ரேட்டு | KNO3 | 101.1032 கி/மோல் | 334 ° செ (633 °F; 607 K) | |
| ருபீடியம் நைட்ரேட்டு | RbNO3 | 147.473 கி/மோல் | 310 °செ (590 °F; 583 K) | |
| சீசியம் நைட்ரேட்டு | CsNO3 | 194.91 கி/மோல் | 414 °செ (777 °F; 687 K) |
.
பயன்பாடுகள்
[தொகு]சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கார உலோகங்களின் நைட்ரேட்டுகளும் அவற்றின் வழிப்பொருட்களும் உரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை பொதுவாக வெடி பொருட்களாக வானவேடிக்கை வெடிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன ;[1]. இவை வலிமையான ஆக்சிசனேற்றிகளாகும். வான வெடிபொருட்களில் வண்ணத்தைச் சேர்க்க இவை பயன்படுகின்றன. சீசியம் நைட்ரேட் கருநீல நிறத்தை உருவாக்குகிறது. பொட்டாசியம் நைட்ரேட்டும் ரூபிடியம் நைட்ரேட்டும் ஊதா நிறத்தை உற்பத்தி செய்கின்றன, இலித்தியம் நைட்ரேட் சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது, சோடியம் நைட்ரேட்டு மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது [4].
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Wolfgang Laue, Michael Thiemann, Erich Scheibler, Karl Wilhelm Wiegand "Nitrates and Nitrites" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a17_265
- ↑ webmaster@chemicalelements.com, Yinon Bentor -. "Chemical Elements.com - Alkali Metals". www.chemicalelements.com. Retrieved 2016-09-26.
- ↑ "THERMODYNAMIC PROPERTIES OF MOLTEN NITRATE SALTS" (PDF).
- ↑ "Phantom Fireworks : Fireworks University : Pyrotechnic Compounds". Phantom Fireworks. Archived from the original on 2020-08-06. Retrieved 2016-10-16.