உள்ளடக்கத்துக்குச் செல்

கார அளவீட்டுமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு கார அளவீட்டுமானி

கார அளவீட்டுமானி (ஆங்கிலத்தில்: pH meter) திரவங்களின் கார/அமில அளவை மின்னழுத்தவேறுபாட்டின் மூலம் அளவீடும் சாதனம் ஆகும், அதாவது நீர்க்கரைசல்களிலுள்ள ஹைட்ரஜன் அயனிகளின் செயல்பாடு அல்லது செறிவை அளவீடுகிறது. இது பொதுவாக கண்ணாடி மின்முனை, கலோமல் தரவு மின்முனை அல்லது இரண்டு மின்முனைகளின் கலவையாக இருக்கும்.[1] இது பொதுவாக திரவங்களின் கார அளவை(pH) அளவீடும், இருப்பினும் சிறப்பு சோதனைக்கோல்(Probe) அரை-திடப் பொருளிலுள்ள கார அளவை அளவீடப் பயன்படுகிறது.

அடிப்படை மின்னழுத்தமானி கார/அமில மீட்டர் வெறுமனே இரண்டு மின்முனையங்களுக்கிடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளவிட்டு அதற்கு தகுந்த pH மதிப்புகளாக மாற்றப்பட்டு திரையில் காட்டப்படுகிறது. இது பொதுவாக மின்துகள் மிகைப்பி, இரண்டு மின்முனைகளையோ அல்லது இரண்டின் கலவையான மின்முனைகளையோ மற்றும் pH மதிப்புகளை காட்டும் திரையைக் கொண்டிருக்கும். இதில் பொதுவாக மின்முனைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கண்ணாடியால் உருவாக்கப்பட்டிருக்கும், அடிப்புறத்தில் ஓர் உணரி மற்றும் மின்விளக்குகளைக் கொண்டிருக்கும்.

பயன்பாடு

[தொகு]
  • கார/அமில அளவிட்டு மானியானது வேதியியல் பரிசோதனைச் சாலைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
  • விவசாய நிலங்களின் மண்ணின் தரம்; நீர்வழங்கல் அமைப்புகள் மற்றும் நீச்சல் குளங்களில் நீரின் தரத்தை பரிசோதனை செய்யவும் பயன்படுகிறது.
  • சுகாதார அமைப்புகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் கிருமிநாசினிகள் பாதுகாப்பானதா என பரிசோதிக்க உதவுகிறது.

சான்றுகள்

[தொகு]
  1. Oxford Dictionary of Biochemistry and Molecular Biology (2 ed.), ed. Richard Cammack, Teresa Atwood, Peter Campbell, Howard Parish, Anthony Smith, Frank Vella, and John Stirling, Oxford University Press 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198529170
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார_அளவீட்டுமானி&oldid=2747354" இலிருந்து மீள்விக்கப்பட்டது