கார்ல் ஜேக்கப் லோவிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ல் ஜேக்கப் லோவிக்
பிறப்பு(1803-03-17)17 மார்ச்சு 1803
பேட் கிரெயுசுநாச், முதல் பிரெஞ்சுக் குடியரசு
(தற்போதைய ரினேலாந்து-பாலாடினேட்டில், ஜெர்மனி)
இறப்பு27 மார்ச்சு 1890(1890-03-27) (அகவை 87)
விராத்ஸ்சாஃப், சிலேசியா மாகாணம், புருசிய இராச்சியம், செருமானியப் பேரரசு
(now விராத்ஸ்சாஃப், போலந்து)
தேசியம்செருமானியர்
பணியிடங்கள்ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்,
சூரிக் பல்கலைக்கழகம்,
பிரெசுலாவ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்லியோபோல்டு கிமெலின்
அறியப்படுவதுபுரோமின் கண்டுபிடிப்பு

கார்ல் ஜேக்கப் லோவிக் (Carl Jabob Lowig) (17 மார்ச் 1803 - 27 மார்ச் 1890) ஒரு செருமானிய வேதியியலாளர் ஆவார். அன்டோயின் ஜெரோம் பாலார்டும் இவரும் தனித்தனி முயற்சிகளில் புரோமினைக் கண்டுபிடித்தனர்.

லியோபோல்ட் கிமெலினுடனான இவரது பணிக்காக ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கனிம உப்புகள் பற்றிய தனது ஆராய்ச்சியின் போது 1825 ஆம் ஆண்டில் கனிம உப்பொன்று குளோரினுடன் வினைப்படுத்தப்படும் போது ஒரு பழுப்பு நிற வாயு வெளிவந்தது. இந்த வாயு புரோமின் என்ற புதிய தனிமம் என்று அறியப்பட்டது.[1][2][3]

ஐடல்பேர்ர்க் பல்கலைக்கழகம் மற்றும் சூரிச் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பின்னர் அவர் ப்ரெஸ்லாவ் பல்கலைக்கழகத்தில் ராபர்ட் வில்ஹெல்ம் புன்சனுக்குப் பின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் 1890 ஆம் ஆண்டில் இறக்கும் வரை ப்ரெஸ்லாவில் பணிபுரிந்து வாழ்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Carl Löwig (1827) "Über Brombereitung und eine auffallende Zersetzung des Aethers durch Chlor" (On the preparation of bromine and a striking decomposition of ether by chlorine), Magazine für Pharmacie, vol. 21, pages 31-36.
  2. Carl Löwig (1828) "Über einige Bromverbindungen und über Bromdarstellung" (On some bromine compounds and on the production of bromine), Poggendorff's Annalen der Physik und Chemie, vol. 14, pages 485-499 (Modern citation: Annalen der Physik, vol. 90, no. 11, pages 485-499).
  3. Carl Löwig, Das Brom und seine chemischen Verhältnisse (Bromine and its chemical relationships) (Heidelberg: Carl Winter, 1829).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ல்_ஜேக்கப்_லோவிக்&oldid=3403544" இலிருந்து மீள்விக்கப்பட்டது