கார்லோ அகுடிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்லோ அகுடிஸ்
பிறப்புமே 3, 1991(1991-05-03)
இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு12 அக்டோபர் 2006(2006-10-12) (அகவை 15)
மொன்சா, மிலன், இத்தாலி
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்க திருச்சபை
பாதுகாவல்
  • இளையோர்
  • மாணாக்கர்


கார்லோ அகுடிஸ் (3 மே 1991 - 12 அக்டோபர் 2006) என்பவர் ஒரு இத்தாலிய கத்தோலிக்கர் ஆவார். [1] உலகெங்கிலும் நடந்த நற்கருணை அற்புதங்களை தான் லுகேமியாவால் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் உருவாக்கிய ஒரு இணையதளத்தில் ஆவணப்படுத்தியதற்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.[2] [1] இவர் தனது வாழ்வில் நோயின் துன்பங்களுக்கு நடுவே காட்டிய மகிழ்ச்சிக்காகவும், கணினி திறன்களுக்காகவும், நற்கருணை மீதான ஆழ்ந்த பக்திக்காகவும் மிகவும் அறியப்படுகின்றார். இந்த பக்தியே இவரது வாழ்க்கையின் முக்கிய கருப்பொருளாக மாறியது.[3]

இவர் இறந்தபின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் 2013 இல் தொடங்கின. திருத்தந்தை பிரான்சிசு இவருக்கு 5 ஜூலை 2018 அன்று வணக்கத்திற்குரியவர் பட்டமளித்தார்.[1] [4]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Servant of God Carlo Acutis". Santi e Beati.
  2. Philip Kosloski (3 டிசம்பர் 2016). ""Computer geek" takes one more step toward sainthood". Aleteia.
  3. "Italy moved by teen who offers life for the Church and the Pope". Catholic News Agency (24 அக்டோபர் 2007).
  4. "Cause of beatification starts!". Associazione Amici di Carlo Acutis (2013).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்லோ_அகுடிஸ்&oldid=2783480" இருந்து மீள்விக்கப்பட்டது