கார்லோசு வாக்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்லோசு இ.எம். வாக்னர் (Carlos E.M. Wagner) அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு துகள் இயற்பியலாளராவார். தத்துவார்த்த இயற்பியல், தொடக்கத் துகள்கள் மற்றும் துகள்களுடன் தொடர்புடைய மீச்சீர்மை கோட்பாடுகளில் இவர் நிபுணத்துவம் கொண்டுள்ளார். வாக்னர் தற்போது அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆர்கோன் தேசிய ஆய்வகத்தின் உயர் ஆற்றல் இயற்பியல் பிரிவில் பணிபுரிகிறார். சிகாகோ பல்கலைக்கழகம், [1] என்றிக்கோ பெர்மி நிறுவனம், காவ்லி அண்டவியல் நிறுவனம் [2] ஆகிய நிறுவனங்களில் இயற்பியல் துறையில் பேராசிரியராகவும் பணிபுரிகிறார். ஆர்கோன் தேசிய ஆய்வகத்தில் உயர் ஆற்றல் இயற்பியல் கோட்பாடு குழுவின் தலைவராகவும் கார்லோசு வாக்னர் செயல்படுகிறார். [3]

2008 ஆம் ஆண்டு அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஓர் உறுப்பினராக வாக்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒருவரின் சக தொழில்முறை பணியாளர்களால் சிறப்பாக தனித்துவமாக அங்கீகரிக்கப்படுவதைக் குறிக்கும். மீச்சமசீர்மை மற்றும் நலிந்தஎலக்ட்ரான் சமச்சீர் முறிவு கோட்பாட்டு நிகழ்வுகள் மீதான பங்களிப்புகளுக்காக வாக்னருக்கு இத்தகுதி கிடைத்தது. அடிப்படை துகள்களின் இடைவினைகள் பற்றிய ஆய்வு, மோதல் இயற்பியல், இக்சு இயற்பியல், கரும்பொருள் கோட்பாடு மற்றும் பொருளுக்கும் பொருளுக்கும் எதிரான சமச்சீரற்ற தோற்றம் ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வாகனர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.

அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியலாளர் மார்செலா கேரீனாவை வாக்னர் திருமணம் செய்து கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2009-06-04. பார்க்கப்பட்ட நாள் 2009-06-03.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. http://cfcp.uchicago.edu/people/index.html
  3. "Archived copy". Archived from the original on 2013-02-15. பார்க்கப்பட்ட நாள் 2009-06-02.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்லோசு_வாக்னர்&oldid=3239679" இலிருந்து மீள்விக்கப்பட்டது