கார்லோசு டேனியல் அல்போர்னோசு கேப்ரேரா
கார்லோசு டேனியல் அல்போர்னோசு கேப்ரேரா Carlos Daniel Albornoz Cabrera | |
---|---|
![]() | |
நாடு | கியூபா |
பிறப்பு | திசம்பர் 26, 2000 காமகுவேய், கியூபா |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2019) |
பிடே தரவுகோள் | 2567 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2605 (செப்டம்பர் 2022) |
கார்லோசு டேனியல் அல்போர்னோசு கேப்ரேரா (Carlos Daniel Albornoz Cabrera) கியூபா நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2000 ஆமாவது ஆண்டு திசம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டில் கார்லோசுக்கு கிராண்டுமாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு ஆகத்து மாத நிலவரப்படி கியூபாவிலுள்ள சதுரங்க வீரர்களின் தரவரிசையில் இவர் மூன்றாவது இடத்தில் இருந்தார்.[1]
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 ஆவது கார்லோசு டோரே நினைவு சதுரங்கப்போட்டியை 7/9 புள்ளிகள் எடுத்து வென்றார். இப்போட்டியில் லெலிசு இசுடான்லி மார்ட்டினசு துவானி, யூரி கோன்சாலசு விதல் மற்றும் எவ்கெனி இசுடெம்புலியாக்கு ஆகியோரை சமநிலை முறிவு போட்டியில் வென்றார்.[2] 2009 ஆம் ஆண்டிலும் இவர் 31 ஆவது கார்லோசு டோரே இரெபெட்டோ நினைவு சதுரங்கப் போட்டியை வென்றார். மீண்டும் இப்போட்டியிலும் 7/9 புள்ளிகளைப் பெற்றார். இலூயிசு பெர்னாண்டோ இபர்ரா சாமி, எலியர் மிராண்டா மேசா மற்றும் பார்ட்லோமிச்சு மசீச்சா ஆகியோரை சமநிலை முறிவு போட்டியில் வீழ்த்தினார்.[3] 2022 ஆம் ஆண்டு சான் பெட்ரோ டி மகோரிசு நகரில் நடைபெற்ற மண்டல 2.3 சதுரங்கப் போட்டியில் 7.5/9 புள்ளிகள் எடுத்து போட்டியை வென்றார்.[4]
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் கார்லோசு விளையாடினார். இப்போடியின் முதல் சுற்றில் பீட்டர் இசுவிட்லரிடம் தோற்றார். 2021 சதுரங்க உலகக் கோப்பையிலும் கார்லோசு விளையாடினார். முதல் சுற்றில் செக் நாட்டு வீரர் வோச்டேச் பிளாட்டிடம் தோற்றார். மேலும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும் இவர் முதல் சுற்றில் அலிசர் சுலேமெனோவை தோற்கடித்தார். ஆனால் இரண்டாவது சுற்றில் பாசெம் அமினிடம் தோற்றார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Albornoz Cabrera, Carlos Daniel FIDE Chess Profile - Players Arbiters Trainers". ratings.fide.com. Retrieved 2023-08-04.
- ↑ "The Week in Chess 1259". theweekinchess.com. Retrieved 2019-09-22.
- ↑ "The Week in Chess 1311". theweekinchess.com. Retrieved 2020-07-09.
- ↑ "The Week in Chess 1429". theweekinchess.com. Retrieved 2022-04-14.
- ↑ "Carlsen, Magnus vs. Pantsulaia, Levan - FIDE World Cup 2023". chess24.com (in ஆங்கிலம்). Retrieved 2023-08-04.
புற இணைப்புகள்
[தொகு]- கார்லோசு டேனியல் அல்போர்னோசு கேப்ரேரா rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
- Carlos Daniel Albornoz Cabrera chess games at 365Chess.com
- கார்லோசு டேனியல் அல்போர்னோசு கேப்ரேரா player profile and games at Chessgames.com
- முகநூலில் கார்லோசு டேனியல் அல்போர்னோசு கேப்ரேரா