உள்ளடக்கத்துக்குச் செல்

கார்மென் டெல் ஆர்ஃபீசே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்மென் டெல் ஆர்ஃபீசே
செப்டம்பர் 2012 இல் சாடோ ரால்ப் ருசி பேஷன் ஷோவில் டெல் ஆர்ஃபீசே
பிறப்புசூன் 3, 1931 (1931-06-03) (அகவை 93)
நியூயார்க் நகரம், அமெரிக்கா
பணிவடிவழகி, நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1946–தற்போது
வாழ்க்கைத்
துணை
  • பில் மைல்ஸ்
    (தி. 1952; ம.மு. 1953)
  • ரிச்சர்ட் ஹெய்மன்
    (தி. 1959; ம.மு. 1960)
  • ரிச்சர்ட் கபிலன்
    (தி. 1963; ம.மு. 1974)
வடிவழகுவியல் தகவல்
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
முடியின் நிறம்வெள்ளி
கண் நிறம்நீலம்

கார்மென் டெல் ஆர்ஃபீசே (Carmen Dell'Orefice; பிறப்பு: 3, சூன், 1931) என்பவர் அமெரிக்க வடிவழகியும், நடிகையுமாவார். 2012 ஆண்டு தரவின்படி உலகின் மிக நீண்டகாலம் வடிவழகியாக இருப்பவராக இவர் அறியப்படுகிறார். இவர் தன் 15 வயதில் வோக் பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார். அன்றிலிருந்து வடிவழகியாக இருந்துவருகிறார். மேலும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ளார்.[1] யாருடைய செலவிலும் அல்லாமல் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே இவருடைய அன்றாட குறிக்கோள்.[2]

துவக்ககால வாழ்க்கை

[தொகு]

டெல் ஆர்ஃபீசே இத்தாலிய, அங்கேரிய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு நியூயார்க்கில் பிறந்தார். இவரின் பெற்றோர் பிரிந்ததால் காப்பகங்களில் அல்லது பிற உறவினர்களுடன் வசித்து வந்தார்.[3] ஒரு கட்டத்தின் இவரது தாயார் மகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

தொழில்

[தொகு]

தனது 13 வயதில், பாலே நடன வகுப்பிற்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது, ஒளிப்படக் கலைஞர் ஹெர்மன் லேண்ட்ஷாப்பின் மனைவி இவரைக் கண்டு வடிவழகியாக விருப்பமா என்று கேட்டார். அதற்கு ஆர்ஃபீசே இசைந்தார். அதற்காக ஜோன்ஸ் கடற்கரையில் இவரை வைத்து சோதனை ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டு பின்னர் நிராகரிக்கபட்டார்.[4] 1946 ஆம் ஆண்டில், இவரது தாத்தா இவரை வோக் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தினார். அப்போது 15 வயதான இவர் ஒரு மணி நேரத்திற்கு $7.50 என்று வடிவழகியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இவர் இடம் முதலில் இடம்பெற்ற 1946 வோக் இதழின் அட்டைப்படத்துக்கு இவரை படமெடுத்த ஒளிப்படக் கலைஞர் எர்வின் ப்ளூமென்ஃபெல்டின் விருப்பமான வடிவழகியாக ஆனார். இவர் 15, திசம்பர், 1946 வோக் இதழில் தோன்றினார்.

டெல் ஆர்ஃபீசேவும் அவரது தாயாரும் பொருளாதார ரீதியாக போராடினர். இவரது வடிவழகி வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இருக்கவில்லை. இவரிடம் தொலைபேசி வசதி இல்லாததால், வடிவழகி பணி குறித்த தகவல்களைத் தெரிவிக்க இவரது குடியிருப்புக்கு ஓடிவந்து தகவல்களை தெரிப்பவர்களை அனுப்ப வேண்டியிருந்தது. பேருந்து கட்டணத்தில் சேமிக்கும் விதமாக இவர் சக்கர காலணியைக்க் கொண்டு சறுக்கியபடி சென்று வந்தார். இவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு மிகுதியாக இருந்தால், புகழ்பெற்ற பேஷன் ஒளிப்படக் கலைஞர்கள் ஹார்ஸ்ட் பி., சிசில் பீட்டன் ஆகியோர் இவரது ஆடைகளில் கூடுதலாக பஞ்சு முதலியவற்றைச் சேர்த்து தைக்கவேண்டி இருந்தது.[4]

இவர் 1947 அக்டோபர் மாத வோக் இதழின் அட்டைப்படத்தில் தோன்றினார். மீண்டும் வோக்கின் 1948 நவம்பர் அட்டைப்படத்திலும் தோன்றினார். மார்க் ஷா இவரை வேனிட்டி ஃபேர் உள்ளாடை விளம்பரத்திற்காக ஒளிப்படம் எடுத்தார். அதில் டெல் ஆர்ஃபீசே தனது கையால் முகத்தை மறைத்தபடி காட்சியளித்தார்.[5]

ஓய்வும் மீண்டும் பணிக்கு திரும்புதலும்

[தொகு]
2005 ஆம் ஆண்டு சிவப்பு ஆடை சேகரிப்பு நிகழ்ச்சியில் டெல் ஆர்ஃபீசே

இவர் 1953 இல் ஃபோர்டு மாடலிங் ஏஜென்சியில் இணைந்தார்.[6]

நிதி தேவைப்பட்டதால், டெல் ஆர்ஃபீசே 1978 இல் வடிவழகி பணிக்கு திரும்பினார். 1984 ஆம் ஆண்டில் இவர் நியூஸ்ஸ்டாண்ட் காலாண்டு வெளியீடான குவாரன்ட்டின் அட்டைப்படத்தில் "ஃபார் தி உமன் ஆப் ஸ்டைல் அண்ட் சம்ப்ஸ்டைன்" என்ற துணைத் தலைப்பில் தோன்றினார்.[7] 1990கள் மற்றும் 2000களில், டார்கெட்டில் ஐசக் மிஸ்ராஹியின் ஆடை வரிசையிலும், சோ செங் மற்றும் ரோலக்ஸுக்காகவும் மாடலிங் செய்தார். வோக், டபிள்யூ மற்றும் ஹார்பர்ஸ் பஜாரில் தோன்றும் அவர்களின் விளம்பரப் பரப்புரைகளில் டெல் ஆர்ஃபீசே தொடர்ந்து இடம்பெற்றார்.

1993 இல் இவர் தி பேப் பிசினஸ் என்ற ஆவணப் படத்தில் தோன்றினார். இது நியூயார்க்கில் சேனல் ஃபோர் தொலைக்காட்சிக்காக வடிவழகிகள் குறித்து டான் பாய்ட் இயக்கிய ஆவணப்படமாகும்.

19, யூலை, 2011 அன்று, ஃபேஷன் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலைப் பல்கலைக்கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.[8]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

டெல் ஆர்ஃபீசே 1950 களின் முற்பகுதியில் பில் மைல்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். வடிவழகி தொழிலில் இவருக்கு கிடைத்த வருமானம் அனைத்தையும் இவரது கணவர் எடுத்துக் கொண்டு மாதம் $50 மட்டுமே கார்மெனிடம் கொடுத்தார். இவர்களுக்கு லாரா என்ற மகள் இருந்தாள். விரைவில் கார்மென் அவரை விவாகரத்து செய்தார். 1958 ஆம் ஆண்டில், இவர் ஒளிப்படக் கலைஞர் ரிச்சர்ட் ஹெய்மனைச் சந்தித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரை மணந்தார். ஒரு கட்டத்தில் இவர் வடிவழகி தொழிலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சொன்னதும், இந்த உறவும் முறிந்தது.[6]

நிதி இழப்புகள்

[தொகு]

1980 கள் மற்றும் 1990 களில், டெல் ஆர்ஃபீசே பங்குச் சந்தையில் தனது பணத்தில் பெருமளவை இழந்தார். இதனால் 1940கள் முதல் 1980கள் வரையிலான இவரது புகழ்பெற்ற மாடலிங் ஒளிப்படங்களை சோதேபிஸ் மூலம் ஏலம் விட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்.[5]

1994 ஆம் ஆண்டில், இவர் மிச்சமிருந்த கொஞ்சப் பணத்தையும், காதலன் நார்மன் லெவியின் பணத்தையும் கொண்டு, மோசமான நிதி மோசடியான பெர்னி மடோஃப் இல் முதலீடு செய்து இழந்தார்.

2008 திசம்பரில், 68 வயதுடைய தோழி, இவரது வாழ்நாள் சேமிப்பை மடாஃப் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார். அது திவாலாகிவிட்டதாக டெல் ஆர்ஃபீசேவுக்கு தொலைபேசியில் தெரிவித்தார். "என் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக, நான் எனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்துவிட்டேன்." என்று டெல் ஆர்ஃபீசே கூறினார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Carmen Dell'Orefice, 82-Year-Old Model, Lands YOU Magazine Cover Huffingtonpost.com
  2. Paroz, Matthew. 2015, 'A model life', L'Officiel Australia, July/August, pp. 88.
  3. "Model", by Michael Gross, 1995, page 102.
  4. 4.0 4.1 "Model", by Michael Gross, 1995, page 103.
  5. 5.0 5.1 "Madoff's World", Vanity Fair, April 2009, by Mark Seal, page 126.
  6. 6.0 6.1 "Model", by Michael Gross, 1995, page 146.
  7. Publisher Kathleen Sullivan Katz, Arlington, Va., 1982-1987
  8. "LCF to celebrate Carmen Dell'Orefice's 80th birthday in style". Archived from the original on 2012-01-02. பார்க்கப்பட்ட நாள் 2017-03-31.
  9. "Madoff's World", Vanity Fair, April 2009, by Mark Seal பரணிடப்பட்டது மார்ச்சு 21, 2009 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்மென்_டெல்_ஆர்ஃபீசே&oldid=4058872" இலிருந்து மீள்விக்கப்பட்டது