கார்ப்போலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ப்போலைட்டுCarpholite
பொதுவானாவை
வகைஇனோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுMn2+Al2Si2O6(OH)4
இனங்காணல்
நிறம்மஞ்சள்
படிக இயல்புபட்டகம், ஊசி மற்றும் இழை கொத்து
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்{100} மேலாக
பிளப்பு{010} இல் சரிபிளவு
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5.5-6
மிளிர்வுபட்டுபோன்றது
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி2.935-3.031
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.610 nβ = 1.628
nγ = 1.630
இரட்டை ஒளிவிலகல்δ = 0.020
பலதிசை வண்ணப்படிகமைதனித்தன்மை; X = Y = வெளிர் மஞ்சள்;
Z = நிறமற்றது
மேற்கோள்கள்[1][2][3]

கார்ப்போலைட்டு (Carpholite) என்பது Mn2+Al2Si2O6(OH)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மாங்கனீசு சிலிக்கேட்டு வகைக் கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிறக் கொத்துகள் போல ஒல்லியான பட்டகங்கள் அல்லது ஊசிகளாக கார்ப்போலைட்டு தோன்றுகிறது. செஞ்சாய்சதுரத் தொகுதி திட்ட்த்தில் இதன் படிகங்கள் படிகமாகின்றன. பெரோகார்ப்போலைட்டு, மக்னீசியோகார்ப்போலைட்டு, வனேடியோகார்ப்போலைட்டு மற்றும் பொட்டாசியோகார்ப்போலைட்டு உள்ளிட்ட கனிமங்கள் கார்ப்போலைட்டுக் குழுவைச் சேர்ந்த பிற கனிமங்களாகும்.

தோற்றமும் கண்டுபிடிப்பும்[தொகு]

பொகிமியாவின் கார்லோவி வாரி மண்டலத்தில் ஓர்னி சிலாவ்கோவ் நகரில் முதன் முதலாக 1817 ஆம் ஆண்டு கார்ப்போலைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. கிரேக்க மொழியில் உறுஞ்சு குழாய் என்ற பொருள் கொண்ட கார்போசு என்ற சொல்லையும் கல் என்ற பொருளை உணர்த்தும் லித்தோசு என்ற சொல்லையும் இணைத்து படிகத்திட்ட்த்தை அடிப்படையாக்கி கார்ப்போலைட்டு என்று பெயர் வைக்கப்பட்டது. குறிப்பாக குறைந்த அளவு பல்லுருவத் தோற்றத்திற்கு ஆளாகும் மென்களிமண் பாறைகள் வடிவில் கார்ப்போலைட்டு தோன்றுகிறது. சுடோவைட்டு, மாங்கனொவன் கார்னெட்டு, குளொரிடோய்டு மற்றும் புளோரைட்டு போன்ற கனிமங்களுடன் கலந்து இயற்கையில் கார்ப்போலைட்டு கிடைக்கிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ப்போலைட்டு&oldid=2634233" இலிருந்து மீள்விக்கப்பட்டது