கார்போரைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்போரைன் (Carboryne) என்பது B10C2H10[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஆர்த்தோ-கார்போரேனின் நிலைப்புத்தன்மை இல்லாத வழிப்பெறுதியாகும். 1,2-டை ஐதரிடோ-ஆர்த்தோ-கார்போரேன் என்றும் இதை அழைக்கலாம். மூல ஆர்த்தோ-கார்போரேனிலுள்ள சி2 அலகில் ஐதரசன் அணுக்கள் இங்கு இல்லை. ஐசோலோபால் கொள்கையுடன் கூடிய பென்சைன் சேர்மத்தை இச்சேர்மம் ஒத்திருக்கிறது[2][3][4].1990 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஒரு கார்போரைன் சேர்மம் ஆர்த்தோ-கார்போரைனிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. டெட்ரா ஐதரோபியூரானில் கார்பனுடன் இணைக்கப்பட்டிருந்த ஐதரசன் அணுக்கள் என்- பியூட்டைல் இலித்தியத்தால் நீக்கப்படுகின்றன. விளைபொருளாக விளையும் இலித்தியம் ஈரெதிர்மின் அயனி 0 ° செல்சியசு வெப்பநிலையில் புரோமினுடன் வினைபுரிந்து புரோமோ ஒற்றை அயனியாக உருவாகிறது

கார்போரைன் தயாரிப்பு, கார்பன் ஈடுபடும் முக்கிய வேதியியல் பிணைப்புகள் சிவப்பில்

வினைக் கலவையை 35° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் கார்போரைன் வெளிவிடப்படுகிறது. பொருத்தமான டையீன்களைப் பயன்படுத்தி பின்னர் இது சேகரிக்கப்படுகிறது.

cகார்போரைன் வினைகள்

ஆந்தரசீன் போல (திரிப்டைசின் போன்ற மூலக்கூறை தருவதற்கு) மற்றும் பியூரான் 10 முதல் 25% அளவு வேதியியல் விளைச்சல் கிடைக்கும். மேற்கண்ட நடைமுறையை ஏற்றுக் கொள்ளும் போது கார்போரைன்கள் ஆல்கைன்களுடன்[5][6] வினைபுரிந்து பென்சோகார்போரேன்களைக் கொடுக்கின்றன. ஆர்த்தோ-கார்போரேன் என்– பியூட்டைல் இலித்தியத்துடன் சேர்ந்து முன் கூறப்பட்டது போல புரோட்டான் நீக்கம் செய்யப்படுகிறது. பின்னர் டைகுளோரோ-டை(டிரைபீனைல் பாசுபினோ) நிக்கலில் இருந்து நிக்கல் ஒருங்கிணைவு கார்போரைனாக மாறுகிறது. இச்சேர்மம் 3-எக்சைனுடன் ஓர் ஆல்கைல் முப்படியாக்க வினையில் ஈடுபட்டு பென்சோகார்போரேனைக் கொடுக்கிறது.

பென்சோகார்போரேன் தயாரிப்பு வினை

பென்சீன் வளையத்தில் கணிசமான பிணைப்பு நீள திருத்தங்கள் வெளிப்படுவதாக இச்சேர்மத்தைக் குறித்த எக்சுகதிர் விளிம்பு விளைவு பகுப்பாய்வு அரோமாட்டிக் பண்பை விலக்குகிறது என தெரிவிக்கிறது. (164.8 பைக்கோமீட்டர் முதல் 133.8 பைக்கோமீட்டர் வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. Zhao, Da; Xie, Zuowei (2016). "Recent advances in the chemistry of carborynes". Coordination Chemistry Reviews 314: 14-33. doi:10.1016/j.ccr.2015.07.011. 
  2. Gingrich, H. L.; Ghosh, T.; Huang, Q.; Jones, M. (1990). "1,2-Dehydro-o-carborane". Journal of the American Chemical Society 112 (10): 4082–4083. doi:10.1021/ja00166a080. 
  3. Jemmis, E. D.; Kiran, B. (1997). "Structure and Bonding in B10X2H10 (X = C and Si). The Kinky Surface of 1,2-Dehydro-o-Disilaborane". Journal of the American Chemical Society 119 (19): 4076–4077. doi:10.1021/ja964385q. 
  4. Kiran, B.; Anoop, A.; Jemmis, E. D. (2002). "Control of Stability through Overlap Matching: closo-Carboranes and closo-Silaboranes". Journal of the American Chemical Society 124 (16): 4402–4407. doi:10.1021/ja016843n. 
  5. Deng, L.; Chan, H.-S.; Xie, Z. (2006). "Nickel-Mediated Regioselective [2 + 2 + 2] Cycloaddition of Carboryne with Alkynes". Journal of the American Chemical Society 128 (24): 7728–7729. doi:10.1021/ja061605j. பப்மெட்:16771473. 
  6. Jemmis, E. D.; Anoop, A. (2004). "Theoretical Study of the Insertion Reactions of Benzyne- and Carboryne- Ni Complexes" (pdf). Maui High Performance Computing Center Application Briefs (Air Force Maui Optical & Supercomputing Site (AMOS)) 2004: 51. http://www.mhpcc.hpc.mil/research/appbriefs/2004/2004MHPCCAppBriefs.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்போரைன்&oldid=2637663" இலிருந்து மீள்விக்கப்பட்டது