கார்பெண்டாரியா வளைகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1859 டச்சு வரைபடத்தில் கார்பெண்டாரியா வளைகுடா

கார்பெண்டாரியா வளைகுடா (Gulf of Carpentaria) என்பது ஆஸ்திரேலியாவின் வடபகுதியின் மூன்று பக்கங்களை உள்ளடக்கிய பெரும் கடல் பகுதியாகும். இதன் வடக்கு எல்லையில் அரபூரா கடல் (ஆஸ்திரேலியாவுக்கும் நியூ கினிக்கும் இடையில் உள்ள நீர்ப்பகுதி) உள்ளது.

இவ்வளைகுடாவை அண்டியுள்ள நிலம் பொதுவாக சமதரையாகவும், தாழ்நிலையில் உள்ளதும் ஆகும். இதன் மேற்கே ஆர்ண்ஹெம் நிலம் மற்றும் வட மண்டலத்தின் உயர் முனையும் உள்ளது. கிழக்கே கேப் யோர்க் தீபகற்பம் அமைந்துள்ளது.

இதன் காலநிலை பெரும்பாலும் சூடானதாகவும் அதிக ஈரப்பதன் உள்ளதாகவும் காணப்படும். ஆண்டுக்கு இரண்டு காலநிலைகளை மட்டுமே கொண்டுள்ளது. உலர் காலநிலை ஏப்ரல் முதல் நவம்பர் வரையும், ஈரக் காலநிலை டிசம்பர் முதல் மார்ச் வரை காணப்படும். பொதுவாக மழைக் காலம் இந்த மூன்று மாத காலத்திலேயே இடம்பெறுகிறது. இதனால் தாழ்நிலைப் பகுதிகள் வெள்ளத்தினால் நிரம்பும். நவம்பர் முதல் ஏப்ரல் வரையான காலத்தில் சூறாவளிகளும் இங்கு உருவெடுக்கின்றன.

டச்சு நாடுகாண் பயணி வில்லெம் ஜான்சூன் என்பவர் 1606 ஆம் ஆண்டில் முதன் முதலாக இங்கு கடற் பயணம் மேற்கொண்டார். ஏபல் டாஸ்மான் 1644 இல் இங்கு வந்தார். பின்னர் 1802 இலும், 1803 இலும் மத்தியூ பிலிண்டேர்ஸ் இங்கு வந்து போனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பெண்டாரியா_வளைகுடா&oldid=1372257" இலிருந்து மீள்விக்கப்பட்டது