கார்பனற்ற நகல் காகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1]

கார்பனற்ற நகல் காகிதம் (ஆங்கிலம்:carbonless copy paper (ccp), non – carbon copy paper or NCR paper) என்பது ஒரு வகையான இரசாயன பூச்சு கொண்டு காகிதம். இந்த காகிதமானது அதன் மேற்புறத்தில் எழுத படும் தகவல்களை கீழ்புறத்தில் உள்ள தாளுக்கு பரிமாற்றம் செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டவை. லோவெல் ஷ்லைசர் மற்றும் பெரி கிரீன் ஆகியோரால் கார்பன் காகிதத்திற்கு மாற்றாக இந்த தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

செயல்படும் விதம்[தொகு]

இந்த காகித அமைப்பு இரண்டு தாள்களை கொண்டதாக இருக்கும். மேல்பகுதியில் உள்ள தாள் அசல் ஆவணத்திற்கும் கீழுள்ள தாள் நகல் ஆவணத்திற்கும் என வடிவமைக்கபட்டிருக்கும். மேற்புற காகிதத்தின் பின்புறம் எளிதில் உடையக்கூடிய மெல்லிய நுன்னுறைகளில் (Micro encapsulated dye or ink) மை நிரப்பபட்டிருக்கும். கீழுள்ள தாளில் ஒரு வகையான களிமண் பூச்சு பூச பட்டிருக்கும். மேற்புற தாளின் மீது எழுதுகோலால் எழுதும்போதோ அல்லது தட்டச்சு செய்யப்படும்போதோ அழுத்தம் ஏற்பட்டு தாளின் பின்புறம் உள்ள நுன்னுறைகள் உடைந்து மை கசிந்து கீழ்புற தாளின் மீது உள்ள களிமண் பூச்சால் உறிஞ்சப்பட்டு குறியீடுகள் நிரந்தரமாக உருவாகின்றன. இதே அடிப்படையில் பல நகல்களை உருவாக்கலாம்.

மேற்கோள்கள் https://en.wikipedia.org/wiki/Carbonless_copy_paper

  1. https://en.wikipedia.org/wiki/Carbonless_copy_paper