கார்த்தூசியன் சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கார்த்தூசியன் சபை
Carthusian coat of arms-2006 11 30 murraybuckley.svg
சுருக்கம்O.Cart., Carthusians
குறிக்கோள் உரைStat crux dum volvitur orbis
உருவாக்கம்15 ஆகத்து 1084; 937 ஆண்டுகள் முன்னர் (1084-08-15)
வகைகத்தோலிக்க துறவற சபை
தலைமையகம்கிராண்டே சார்ட்றேயூசு (தாயகம்)
முக்கிய நபர்கள்
புனித புரூனோ, நிறுவுனர்
வலைத்தளம்www.chartreux.org
www.vocatiochartreux.org

கார்த்தூசியன் சபை அல்லது புனித புரூனோவின் சபை என்பது அடைபட்ட வாழ்வுவாழும் கத்தோலிக்க துறவறச்சபை ஆகும். இதை கோல்ன் நகரின் புனித புரூனோ, 1084 ஆம் ஆண்டில் நிறுவினார். இச்சபை நூர்சியாவின் பெனடிக்ட்டின் சட்டங்களை விடுத்து குழும வாழ்வு மற்றும் தனித்த வாழ்வு ஆகியவற்றின் கலவையாக ஒரு புதிய சட்டத்தைத் தனக்கெனக் கொண்டுள்ளது. அச்சட்டங்களை இசுட்டடூட்சு (Statutes) என அழைப்பர். கார்த்தூசியன் என்னும் பெயர் இச்சபையின் முதல் மடம் நிறுவப்பட்ட இடமான கார்த்தூசிய மலைப்பள்ளத்தாக்கின் பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். இச்சபையின் குறிக்கோள் உரை உலகு நிலையற்றது, சிலுவையே நிலையானது (இலத்தீன்:Stat crux dum volvitur orbis) என்பதாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Douglas Raymund (1913). "The Carthusian Order". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2015-01-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்தூசியன்_சபை&oldid=1786901" இருந்து மீள்விக்கப்பட்டது