கார்ட்லிசு தேதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ட்லிசு தேதா நினைவுச் சின்னம்
கார்ட்லிசு தேதா நிழற்படம்

கார்ட்லிசு தேதா[1] (Kartlis Deda) என்பது சியார்சிய மொழியில் ஒரு சியார்ச்சியனின் தாய் என்ற பொருள் தரும் ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இச்சின்னம் சியார்சியாவின் தலைநகரம் திபிலீசி நகரில் அமைந்துள்ளது.

1958 ஆம் ஆண்டில் திபிலீசி நகரம் 1500 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய நேரத்தில் சோலொலாக்கி மலை உச்சியில் இந்த சிலை நிறுவப்பட்டது. பிரபல சியார்சிய சிற்பியான எல்குயா அமாசுகெலி சியார்சிய தேசிய ஆடை உடுத்திய ஒரு பெண்ணின் இருபது மீட்டர் உயர அலுமினிய உருவத்தை வடிவமைத்தார்.

இச்சிலை சியார்சிய தேசிய பண்பாட்டை அடையாளப்படுத்துகிறது. நண்பர்களாக வருபவர்களை வாழ்த்த இடது கையில் மதுக் கோப்பையும், பகைவர்களாக வருபவர்களுக்கு வலது கையில் நீண்ட வாளும் பெண்சிலையிடம் கொடுக்கப்படிருக்கிறது[2].

Kartvlis Deda.jpg

மேற்கோள்கள்[தொகு]

  1. It has been argued that the original name was Kartvlis Deda, meaning "Mother of a Georgian", but this rendition never entered mainstream use. See: Georgian Soviet Encyclopedia, Volume 1, p. 350, Tbilisi, 1975
  2. David J Constable, « Kartlis Deda: The Importance of Georgia's Most Famous Woman », huffingtonpost.co.uk, 21/08/2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்லிசு_தேதா&oldid=2657887" இருந்து மீள்விக்கப்பட்டது