கார்ட்டர் பாம்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கார்ட்டர் பாம்பு | |
---|---|
Red-sided Garter Snake Thamnophis sirtalis parietalis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
துணைத்தொகுதி: | முதுகெலும்பிகள் |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | Squamata |
துணைவரிசை: | Serpentes |
குடும்பம்: | Colubridae |
பேரினம்: | தம்னோபிசு (Thamnophis) Fitzinger, 1843 |
இனங்கள் | |
See Taxonomy section. |
கார்ட்டர் பாம்பு என்பது தம்னோபிஸ் (Thamnophis) இனத்தின் கீழ் வரும் வடஅமெரிக்கப் பாம்பினமாகும். சாதாரணமாக கனடாவில் இருந்து நடு அமெரிக்கா வரை காணப்படுகின்றன.
குறிப்பு[தொகு]
இப்பாம்புகளின் முதுகுப்புறத்தில் நெடுக்குவாட்டில் ஒன்று அல்லது மூன்று வரிகள் (அல்லது பட்டைகள்) பொதுவாக சிவப்பு, மஞ்சள், அல்லது வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. மேலும் ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த பாம்புகள் வெவ்வேறு நிற வரிகளைக் கொண்டிருப்பதும் உண்டு. பெரும்பாலான கார்ட்டர் பாம்புகள் 60 செ.மீ நீளத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனினும், இதனை விட நீளமாகவும் வளரக்கூடும். த.கிகாசு (T. gigas) என்னும் சிற்றினம் 160 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது.
உணவு முறை[தொகு]
கார்ட்டர் பாம்புகள் ஊனுண்ணிகள் ஆகும். இவை தங்களால் வெல்லப்படக்கூடிய விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. மண்புழு, பூச்சிகள், அட்டைகள், நிலநீர் வாழிகள், மீன், ஊர்வன, கொறிணிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். சிலவேளைகளில் இவை முட்டைகளையும் உட்கொள்கின்றன. இரையை கார்ட்டர் பாம்புகள் முழுதாக விழுங்குபவையாகும்.