கார்ட்டோசாட்-2இ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கார்டோசாட்-2இ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கார்டோசாட்-2இ
திட்ட வகைபுவியை படம் எடுத்தல்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
காஸ்பார் குறியீடு2017-036C
சாட்காட் இல.42767
இணையதளம்PSLV-C38 webpage
திட்டக் காலம்திட்டம்: 5 வருடங்கள்
விண்கலத்தின் பண்புகள்
பேருந்துஐ. ஆர். எஸ்-2[1]
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவு712 kg (1,570 lb)[2]
திறன்986 வாட்ஸ்[2]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்23 June 2017, 03:59 (2017-06-23UTC03:59) UTC[3]
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம் சி38[3]
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம் சதீஸ் தவான் முதல் ஏவுதல விண்வெளி மையம்[2]
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி மைய வட்டப்பாதை
சுற்றுவெளிSun-synchronous
அண்மை505 km (314 mi)
கவர்ச்சி505 km (314 mi)
சாய்வு97.44°
சுற்றுக்காலம்94.72 minutes
EpochPlanned[2]

கார்டோசாட்-2இ (Cartosat-2E) என்பது விண்ணில் செலுத்தப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும். இது பூமி பகுதிகளை புகைப்படங்கள் எடுத்து அனுப்பத் தொடங்கியுள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரம் மாநிலம் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி. எஸ். எல். வி-சி38 ஏவூர்தி மூலம், கார்டோசாட் 2 இ செயற்கைக்கோளும், 30 சூன் 23-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டன.நானோ செயற்கைக்கோள்களும் இந்தியாவின் கார்டோசாட்-2 இ செயற்கைகோள் 712 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இதில் நிலப் பகுதியை துல்லியமாகப் படம் பிடிக்கும் நவீன நிழற்படக் கருவி, தொலையுணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது அதில் உள்ள நிழற்படக் கருவிகள் அனைத்தும் துல்லியமாக வேலை செய்யத் தொடங்கியுள்ளன. சூன் 26- ஆம் தேதி முதல் கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. இந்தாண்டு பிப்ரவரி 15-ஆம் தேதிதான் 103 செயற்கைக்கோள்களுடன் கார்டோசாட் 2 டி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி37 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி உலகச் சாதனை படைத்தது இந்திய விண்வெளி ஆய்வு மையம். கார்டோசாட்-2 டி செயற்கைகோள் 714 கிலோ எடையைக் கொண்டது. இது பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதில் இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் 3 நிழற்படக் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இந்தச் செயற்கைக்கோளும் இப்போது தொடர்ந்து படம் எடுத்து அனுப்பி வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-7, பி.எஸ்.எல்.வி. சி-9, பி.எஸ்.எல்.வி. சி-15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி-34 உள்ளிட்ட ஏவூர்திகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

ராணுவப் பயன்பாடு[தொகு]

நாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் 13 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறது. இப்போது அனுப்பப்பட்டுள்ள கார்டோசாட் 2 இ செயற்கைகோள் இதில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் செயற்கைக்கோள்களைப் பிரதானமாக்கி இந்திய ராணுவம், அண்டை நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கார்டோசாட் 1, 2, ரியோ சாட் 1, 2 ஆகியவை ராணுவக் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நிலப்பகுதியிலும் கடல் பகுதியிலும் எதிரி நாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், அச்செயல்பாடுகளின் வரைபட எல்லைகளைக் குறிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன. இந்த வரிசையில் கார்டோசாட் 2 இ, அதிநவீன ரிமோட் சென்சிங் முறையில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து துல்லியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. ஜியோ சாட் 7 செயற்கைக்கோளை இந்திய கடற்படை பயன்படுத்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Krebs, Gunter. "Cartosat 2, 2A, 2B, 2C, 2D, 2E". Gunter's Space Page. பார்த்த நாள் 19 June 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 "PSLV-C38: Cartosat-2 Series Satellite Brochure". Indian Space Research Organisation. பார்த்த நாள் 19 June 2017.
  3. 3.0 3.1 Graham, William (22 June 2017). "PSLV rocket launches Cartosat 2E and 30 small sats". NASASpaceFlight.com. பார்த்த நாள் 23 June 2017.
  4. By DIN | Published on : 30th June 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்டோசாட்-2இ&oldid=2616114" இருந்து மீள்விக்கப்பட்டது