கார்டுவஸ் பிக்னோசெபலஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்டுவஸ் பிக்னோசெபலஸ் (Carduus pycnocephalus) என்பது, முட்செடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம். இது "இத்தாலிய முட்செடி" "இறகற்ற இத்தாலிய முட்செடி", "பிளைமவுத் முட்செடி" என்ற பல பொதுப்பெயர்களில் அழைக்கப்படுகிறது. தென் ஐரோப்பாவில் மத்திய தரைக்கடல் பகுதி, வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பா, காக்கேசியா, இந்திய துணைக்கண்டத்தைத் தாயகமாகக் கொண்டது..[1] மற்ற பகுதிகளில் இது அறிமுகப்படுத்தப்பட்ட சிற்றினமாகும். இதர கண்டங்களில் இது நச்சுக் களைச்செடியாகவும் ஆக்கிரமிப்புத் தாவரமாகவும் பரவிவருகிறது.

விளக்கம்[தொகு]

Carduus pycnocephalus plant (California).

இது ஒரு குளிர்கால பருவத்தாவரம். இத் தாவரத்தின் தண்டுகள் 8 அங்குலங்கள் (20 செ.மீ) முதல் 6.6 அடி (2.0 மீ.) வரை நீளம் உடையது. ரோமமற்று லேசான கம்பளித்தன்மையுடன் காணப்படும் தண்டுகள் முட்களைக் கொண்டிருக்கும்.[2]

10- 15 செ.மீ. விட்டமுள்ள நான்கு முதல் பத்து பிளவுபட்ட அடியிலைகளைக் கொத்தாகக் கொண்டு 25-36 செ.மீ விட்டம் கொண்ட இதழடுக்குகளுடன் இத் தாவரம் வளரும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  • "BSBI List 2007". Botanical Society of Britain and Ireland. Archived from the original (xls) on 2015-01-25. Retrieved 2014- 10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டுவஸ்_பிக்னோசெபலஸ்&oldid=3841868" இலிருந்து மீள்விக்கப்பட்டது