கார்டினல் மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பங்தாய் கார்டினல் மீன்
Pterapogon kauderni1.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: பேர்சிஃபார்மீசு
குடும்பம்: அப்போகொனைடீ
துணைக்குடும்பம்: Apogoninae
பேரினம்: Pterapogon
Koumans, 1933
இனம்: P. kauderni
இருசொற் பெயரீடு
Pterapogon kauderni
Koumans, 1933

பங்காய் கார்டினல் மீன் (Banggai cardinalfish; Pterapogon kauderni) என்பது ஒரு வெப்ப மண்டல கடல்வாழ் உயிரியாகும். இது அப்போகொனைடீ என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தில் இது மட்டுமே உள்ளது.[2] இவை ஆழமற்ற பகுதிகளில் உள்ள பாறைகளில் காணப்படும், இரவு நேர உயிரினம். இது மீன் வணிகத்தில் பிரபலமாக உள்ளது. மனிதர்களால் வளர்க்கப்பட்டு இனப் பெருக்கம் செய்யப்படும் மீன் வகைகளில் இதுவும் ஒன்று. இன்னும் சில வகைகள் அவர்களின் வாழிடத்திலே காணப்படுகிறது. இவை இன்று அழிந்து கொண்டிருக்கும் இனங்களில் ஒன்று.[1]

பரவல்[தொகு]

இந்தோனேசியாவின் வட சுலாவேசியில் தன் இயற்கையான வாழிடத்தில்.

இந்த இன மீன்களின் வாழிடம் மிகவும் குறுகியது. இந்தோனேஷியாவின் பாங்க்காய் தீவுகூட்டங்களில் காணப்படுகிறன.[3] இதன் பரவல் 5,500 சதுர கி.மீ. மட்டுமே. இவற்றின் மொத்த எண்ணிக்கை 2.4 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விளக்கம்[தொகு]

இவை 8 செ.மீ ( 3 அங்குலம்) நீளம் வரை வளரக்கூடியது. தன்னுடைய குஞ்சம் போன்ற நீண்ட வாலால் இவை மற்ற கார்டினல் மீன்களிலிருந்து வேறுபடுகிறன. உடம்பு முழுவதும் கருப்பு வெள்ளைக் கோடுகள் பட்டையாகக் காணப்படும். வாலில் சிறு சிறு கருப்பு வெள்ளைக் கோடுகள் காணப்படும். இவற்றில் ஆண் மீன்கள் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் வாய்க் குழிக் காணப்படும். ஆனால் இது மீனின் இனப் பெருக்கம் நேரத்தில் ஆண் தன் அடைகாக்கும் பணியைத் தொடங்கும் போது தெளிவாகத் தெரியும்.

சூழ்நிலையியல்[தொகு]

இந்தக் குடும்பத்தில் இது மட்டுமே பகலில் பணி செய்யும் பழக்கம் கொண்டது. இந்த மீன் வகைகள் கொழுப்பைக் குறைக்கக் கூடிய வெப்ப மண்டல மீன் ஆகும். இது ஆழமற்ற நீரில் வாழும். இது பவளப் பாறை, கடல்புல் படுகை மற்றும் திறந்த கடல் மணலில் வாழக் கூடியவை. இவைகள் பெருந்தீவுகளின் அமைதியான சூழலில் காணப்படும். இவைகள் கடல் தாவரங்களான கடற்புல், கடல் முள்ளி, என்ஹாலஸ் போன்றவற்றின் இடையில் அடிக்கடி காணப்படும். சில வேளைகளில் அலையாத்திக் காடுகளில் காணப்படும் சதுப்புநில மரங்களின் வேர்களுக்கிடையில் வாழும். இத்தாவரங்கள் இவைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது அவற்றைப் பாதுகாக்கும். இவைகளுக்கு ஆபத்து வரும்போல தோன்றினால் இவைகள் முட்களுக்கு இடையில் போய் ஒளிந்து கொண்டு தங்களைக் காத்துக் கொள்ளும். தங்களின் இருப்பிடம் விட்டு தனியாக விலகிச் சென்றாலும் அவர்கள் தொந்தரவு செய்யப்படுமானால் தன்னுடைய இருப்பிடத்தை நோக்கிச் செல்லும் தன்மையுடையவை. துடுப்புக் கால் பூச்சிகள் இவற்றின் முக்கிய உணவாகும். ஆனால் கிடைக்கும் உணவை சாப்பிடும் தன்மையுடையவை.    

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Allen, G.R & T.J. (2007): Pterapogon kauderni. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2.
  2. Mabuchi, K.; Fraser, T.H.; Song, H.; Azuma, Y.; Nishida, M. (2014). "Revision of the systematics of the cardinalfishes (Percomorpha: Apogonidae) based on molecular analyses and comparative reevaluation of morphological characters". Zootaxa 3846 (2): 151–203. doi:10.11646/zootaxa.3846.2.1. பப்மெட்:25112246. 
  3. "Pterapogon kauderni". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. August 2015 version. N.p.: FishBase, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pterapogon kauderni
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டினல்_மீன்&oldid=2967605" இருந்து மீள்விக்கப்பட்டது