கார்டிசோமா அர்மாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்டிசோமா அர்மாட்டம்
கார்டிசோமா அர்மாட்டம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிறசுடேசியா
வகுப்பு:
மலகோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
பிராக்கியுரா
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கா. அர்மாட்டம்
இருசொற் பெயரீடு
கார்டிசோமா அர்மாட்டம்
கெர்க்லாட்சு, 1851

கார்டிசோமா அர்மாட்டம் (Cardisoma armatum) என்பது நிலத்தில் வாழக்கூடிய நண்டு இனம்.

பெயர்கள்[தொகு]

(ஆப்பிரிக்க) வானவில் நண்டு, (நைஜீரிய) நிலவு நண்டு அல்லது தேசபக்த நண்டு இந்த நண்டு அழைக்கப்படுகிறது. முதிர்ச்சியடைந்த நண்டு சோப்பு நண்டுகள் என மீன் காட்சியகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பெயரானது இந்த நண்டின் ஆக்குரோசமான தன்மையின் காரணமாக உருவானது. செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் கடைகளுக்கு அனுப்பப்படும் போது, இவை சண்டையிடும் போது ஏற்படும் இழப்பினைத் தடுக்க சோப்பு பெட்டிகளில் அடைத்து அனுப்பப்படுகின்றன. சந்திரன் நண்டு மற்றும் சோப்பு நண்டு எனும் பெயர்கள் பிற ஒத்த வகை நண்டுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இதர வண்ணமயமான மூன்று சிற்றினங்களான ஜிகார்சினசு ரூரிகோலா, ஜி. குவாட்ரேடசு மற்றும் கார்டிசோமா கார்னிபெக்சு இடையே குழப்பத்தினை ஏற்படுத்துகின்றன. தில் கா. கார்னிபெக்சு தவிரப் பிற சிற்றினங்கள் அமெரிக்காவினைச் சார்ந்தவை.[1]

விநியோகம்[தொகு]

கார்டிசோமா அர்மாட்டம் மேற்கு ஆபிரிக்காவின் கடலோரப் பகுதிகளிலிருந்து தோன்றியது.[2] ஆனால் இது சில வடிநிலப் பகுதிகளிலும் (எ.கா. வோல்ற்றா ஆறு வடிநிலம்), மற்றும் கேப் வர்டி போன்ற தீவுகளிலும் காணப்படுகிறது.[3]

விளக்கம்[தொகு]

இளமையில் இந்நண்டுகள் பொதுவாக நீலம்/ஊதா நிற மேலோடுடன், சிவப்பு நிற கால்கள் மற்றும் வெண்மையான நகங்களைக் கொண்டுள்ளன. வளர்ச்சியடையும் போது இந்த நிறம் பொதுவாக மங்கிவிடும். இவை மேலோட்டின் அளவு 20 செ.மீ. வரை வளரலாம். வளர்ப்பில் உள்ள நண்டுகள் இந்த நீளத்தினை எட்டிப்பிடிக்கின்றன.

சூழலியல் மற்றும் வாழ்க்கைச் சுழற்சி[தொகு]

இந்த நண்டுகள் தமது உணவில் முக்கியமாகப் பழம், தாவரங்கள் மற்றும் மாமிசங்களை எடுத்துக்கொள்கின்றன. இவை தன்னின உயிருண்ணியாக அறியப்படுகின்றன. சிறிய நண்டுகள், சிறிய ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வன, மெல்லுடலிகள், மீன் மற்றும் பூச்சிகளைப் பிடிக்க முடிந்தால் அவற்றை உட்கொள்ளும். இளம் மற்றும் வயது வந்த நண்டுகள் அதிக நேரத்தை வறண்ட நிலத்தில் செலவிடுகின்றன. பெண்கள் நண்டுகள் தங்கள் முட்டைகளை விடுவிக்கக் கடலுக்குச் செல்கின்றன. கருவளர்ச்சியடைந்த முட்டையிலிருந்து நுண்ணிய உயிரிகள் வெளியேறுகின்றன.[4] பின்னர் இவை இளம் நண்டுகளாக உருவாகின்றன. வளர்ச்சியடையும் போது, இந்நண்டுகள் நிலவாழ்வினைத் தொடங்க வேண்டும். அவ்வாறு நிலவாழ்வினைத் தொடங்காத நண்டுகள் வளர்ச்சியின் காரணமாக நீரில் மூழ்க நேரிடும். இவை நில நண்டு வகையினைச் சார்ந்ததால் இவற்றால் நீண்ட காலம் நீரில் மூழ்கி இருக்க முடியாது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bright, D., & C. Hogue. 1972. A synopsis of burrowing land crabs of the World and list of their arthropod symbionts and burrow associates. Contributions in Science. No. 220. Available online (PDF)
  2. Fischer, W., G. Bianchi and W.B. Scott, editors. 1981. FAO species identification sheets for fishery purposes. Eastern Central Atlantic fishing areas 34, 47 (in part), volume VI. Canada Funds-in-Trust, Department of Fisheries and Oceans Canada, Ottawa, byarrangement with the Food and Agriculture Organization of the United Nations, Rome.
  3. Matt Clarke (2005-11-14). "Rainbow crab, Cardisoma armatum". Practical Fishkeeping. Archived from the original on 2007-07-07.
  4. José A. Cuesta, Klaus Anger, Larval Morphology and Salinity Tolerance of a Land Crab from West Africa, Cardisoma Armatum (Brachyura: Grapsoidea: Gecarcinidae), Journal of Crustacean Biology, Volume 25, Issue 4, 1 October 2005, Pages 640–654, https://doi.org/10.1651/C-2551.1
  5. D. Warren. "Cardisoma armatum". Archived from the original on 2007-07-04. பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டிசோமா_அர்மாட்டம்&oldid=3144115" இலிருந்து மீள்விக்கப்பட்டது