காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவு
Jump to navigation
Jump to search
காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவு என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவின் கீழ் 9 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. அவை, காரைநகர் வடக்கு, காரைநகர் வடகிழக்கு, காரைநகர் கிழக்கு, காரைநகர் தென்கிழக்கு, காரைநகர் தெற்கு, காரைநகர் தென்மேற்கு, காரைநகர் மேற்கு, காரைநகர் வடமேற்கு மற்றும் காரைநகர் மத்தி என்பனவாகும். 2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 9,547 பேர் வசிக்கின்றனர்.
இன ரீதியான சனத்தொகை[தொகு]
2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேச செயலாளர் பிரிவு இலங்கைத் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது.
மத ரீதியான சனத்தொகை[தொகு]
2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேச செயலாளர் பிரிவில் இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளதோடு கிறித்தவர்களும் சிறியளவில் உள்ளனர்.