காருகுடி கைலாசநாதர் கோயில்
காருகுடி கைலாசநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°08′59″N 78°26′06″E / 11.1497°N 78.4351°E |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
அமைவிடம்: | காருகுடி |
சட்டமன்றத் தொகுதி: | முசிறி |
மக்களவைத் தொகுதி: | பெரம்பலூர் |
ஏற்றம்: | 178.94 m (587 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | கைலாசநாதர் |
தாயார்: | கருணாகரவல்லி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கைலாசநாதர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் காருகுடி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 178.94 மீட்டர் உயரத்தில், (11°08′59″N 78°26′06″E / 11.1497°N 78.4351°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு காருகுடி பகுதியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
தல வரலாறு
[தொகு]சந்திர பகவான் ரேவதி நட்சத்திர தேவியை மணந்த பின்னர், இருவரும் சிவபெருமானை தரிசிக்க வேண்டியதால், இறைவன் கைலாசநாதர், இறைவி கருணாகரவல்லியுடன் அவர்களுக்கு காட்சி தந்த இடமே இத்திருத்தலம் ஆகும்.[1]
தல பெருமை
[தொகு]சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைப் பகுதியை வல்வில் ஓரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் இக்கோயிலைப் புனரமைத்துக் கட்டியுள்ளான். அதன் பின்னர் கி. பி. 1266ஆம் வருடங்களில் கருநாடக அரசன் போசல வீரராமநாதன் இக்கோயிலுக்கு நிறைய நிலங்களைத் தானமாகக் கொடுத்து பூசைகள் தடையின்றி நடைபெறுமாறு செய்துள்ளான். கி. பி. 1541 மற்றும் 1619ஆம் வருடங்களில் இராமச் சக்கரவர்த்தி என்னும் அரசன் நில தானங்கள் வழங்கியுள்ளான்.[2]
முக்கியத்துவம்
[தொகு]ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது தோசம் நீங்க இக்கோயிலில் வழிபாடு செய்கின்றனர். மேலும், கண், நீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இக்கோயிலில் பரிகார பூசைகள் நடைபெறுகின்றன.[3]
இதர சன்னதிகள்
[தொகு]காசி விசாலாட்சி, விட்டுணு, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன், நவக்கிரகங்கள், கால பைரவர் ஆகியோர் சன்னதிகளும் இக்கோயிலில் காணப்படுகின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சந்திரன்-ரேவதி நட்சத்திர தேவிக்கு சிவன், பார்வதி காட்சியளித்த காருகுடி கைலாசநாதர் கோயில்". www.dinakaran.com (in ஆங்கிலம்). Retrieved 2024-09-19.
- ↑ "Kailasanathar Temple : Kailasanathar Kailasanathar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2024-09-19.
- ↑ கு. வைத்திலிங்கம் (20 சனவரி 2022). "நீர், கண் நோய்கள் தீர்க்கும் காருகுடி கைலாசநாதர் திருக்கோயில்". Dinamani. Retrieved 2024-09-19.
- ↑ admin (30 September 2017). "Karukudi Sri Kailasanathar Temple - A Revathi Nakshathira Temple !!". Gosthala (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-09-19.