உள்ளடக்கத்துக்குச் செல்

காரி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய தொடர்பின் போது காரி (அகா-காரி) மற்றும் பிற அந்தமானிய மக்களின் பிரதேசம்.

காரி மக்கள் ( Cari people ), என்பவா்கள் பூர்வீக அந்தமானிய மக்கள் ஆவாா்கள். இவர்கள் முதலில் வடக்கு அந்தமான் தீவின் வடகோடிப் பகுதியிலும், இந்தியப் பெருங்கடலில் உள்ள லேண்ட்ஃபால் தீவிலும் வசித்து வந்தனர்.

காரி மக்கள், வடக்கு அந்தமானிய மொழியின் மற்ற வட்டார மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடைய அகாச்சாரி என்ற ஒரு தனித்துவமான வட்டார மொழியைப் பேசினர்.இவர்கள் பிரத்தியேகமாக கடற்கரையில் வசிப்பவர்களாக இருந்தனர்.[1]

வரலாறு

[தொகு]

முதல் ஐரோப்பிய தொடர்புகளின் போது (1790களில்), சுமார் 3,500 அந்தமானிய மக்களில், காரி மக்களின் எண்ணிக்கை 100 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.[2] மற்ற அந்தமானிய மக்களைப் போலவே, காரி மக்களும் காலனித்துவ மற்றும் காலனித்துவத்திற்குப் பின்பு, நோய்கள், மது, காலனித்துவப் போர்கள் மற்றும் நில இழப்பு ஆகியவற்றால் பெருமளவில் அழிந்தனர். 1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் தொகை 39 ஆகக் குறைந்தது, 1911 இல் 36 ஆகவும், 1921 இல் 17 ஆகவும், 1931 இல் 9 ஆகவும் குறைந்தது.[3]

1949 இல், எஞ்சியிருந்த காரி மக்கள், உயிர் பிழைத்திருந்த மற்ற அனைத்து அந்தமானிய மக்களுடன் சேர்ந்து, பிளஃப் தீவில் உள்ள ஒரு ஒதுக்குப்புறப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் மீண்டும் 1969 இல் சுட்ரெய்ட் தீவில் உள்ள ஒரு ஒதுக்குப்புறப் பகுதிக்கு மாற்றப்பட்டனர்.[4]

1994 இல், மக்கள் தொகை 57 மற்றும் 59 வயதுடைய இரண்டு பெண்களாக மட்டுமே குறைந்தது, எனவே இது இன அழிவின் பாதையில் சென்று கொண்டிருந்தது.[3] காரி மக்கள் ஒரு நியமிக்கப்பட்ட பட்டியல் பழங்குடியினர் ஆவர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. George Weber (~2009), The Tribes பரணிடப்பட்டது மே 7, 2013 at the வந்தவழி இயந்திரம். Chapter 8 in The Andamanese பரணிடப்பட்டது சூலை 24, 2013 at the வந்தவழி இயந்திரம். Accessed on 2012-07-12.
  2. George Weber (~2009), Numbers பரணிடப்பட்டது மே 31, 2012 at the வந்தவழி இயந்திரம். Chapter 7 in The Andamanese பரணிடப்பட்டது சூலை 24, 2013 at the வந்தவழி இயந்திரம். Accessed on 2012-07-12.
  3. 1 2 A. N. Sharma (2003), Tribal Development in the Andaman Islands, page 62. Sarup & Sons, New Delhi.
  4. Rann Singh Mann (2005), Andaman and Nicobar Tribes Restudied: Encounters and Concerns, page 149. Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-8324-010-0
  5. "List of notified Scheduled Tribes" (PDF). Census India. p. 27. Archived from the original (PDF) on 7 November 2013. Retrieved 15 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரி_மக்கள்&oldid=4515248" இலிருந்து மீள்விக்கப்பட்டது