காரிரத்தினக் கவியராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காரிரத்தினக் கவியராயர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் புலவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள தென்திருப்பேரையில் வேளாண் மரபில் பிறந்த வைணவப் புலவர் காரிரத்தினம் என்பது நம்மாழ்வாரின் சிறப்புப் பெயர். வைணவராகிய இக்கவிராயர் நம்மாழ்வாரின் பெயரைப் பெற்றார். இவருடைய ஆசிரியர்:- இவர் ஆழ்வார் திருநகரியில் இருந்தவரும், மாறன் அலங்காரம் முதலான நூல்களை இயற்றிவருமான திருக்குருகைப் பெருமாள் கவியராயரிடம் கல்வி பயின்றார். இவர் எழுதிய உரைகள் மாறன் அலங்காரம் என்ற நூலுக்கு உரை இயற்றினார். இவர் திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக 'நுண்பொருள் மாலை' என்ற ஒரு நூலை இயற்றியுள்ளார். தொல்காப்பிய நுண்பொருள் மாலை என்ற உரைவிளக்கம் எழுதியதாக் கூறுவார்.

==== நுண்பொருள் மாலை =====
  திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு காரிரத்தினக் கவிராயர் இயற்றிய விளக்கமான  நூல் 'நுண்பொருள் மாலை' அவ்விளக்கவுரை செந்தமிழில் (6-10) வெளிவந்தது. சிறப்புகள் இவ்விளக்கவுரை பல சிறப்புகளை உடையது.  பரிமேலழகர் உரையில் விளக்கம் காணவேண்டிய பகுதிக்கும், பலமுறை நுணுகிக் கற்றுத் தெளியவேண்டிய பகுதிக்கும் அரிய இலக்கண குறிப்புக்கும் விளக்கம் எழுதியுள்ளார்.
==== மேற்கோள்  ====
     முதற்குறளின், பரிமேலழகர் உரைக்கு இவர் தரும் விளக்கம் மிகவும் நயமானது. ஆகுபெயர் அன்மொழித் தொகை ஆராய்ச்சியில்  பரிமேலழகர் உள்ளடக்கிடக்கையை அறிய ஊழிற் பெருவலி (380) என்னும் குறளின் விளக்கவுரை உதவுகின்றது. பரிபாடலுக்குப்  பரிமேலழகர் உரை எழுதினார் என்பதை 216 ஆம் குறள் உரையில் "பரிபாட்டினுள் மழையிருஞ்சுல்" என்பதனை முன்பிலன்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என்றார் இவ்வுரையாசிரியர் என்று இவர் தெளிவுபடுத்துகின்றனார்.
==== மேற்கோள்  ====
நூலின்  பெயர் : உரையாசிரியர்கள்