காரியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருநை எனப் போற்றப்பட்ட தாமிரபரணி ஆறு பொதியமலையில் தோன்றி சுமார் 120 கிலோமிட்டர் தொலைவு பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாம்பாறு, காரியாறு, பேயாறு, உள்ளாறு என்னும் சிற்றாறுகள் இதில் வந்து ஒன்றுகலக்கின்றன.

அடையாறு கடலில் கலக்குமிடத்தில் அடையாறு என்னும் ஊர் இருப்பதுபோல் காரியாறு பொருநையாற்றோடு கலக்குமிடத்தில் இருந்த ஊர் காரியாறு.

காரிகிழார் என்னும் சங்ககாலப் புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் நலங்கிள்ளி, அவன் தம்பி மாவளத்தான், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஆகிய அரசர்களிடம் தொடர்புகொண்டு பாடியிருக்கிறார்.

சோழநாட்டு அரசுரிமைக்காக நலங்கிள்ளியோடு போரிட்டவன் நெடுங்கிள்ளி.
இந்த நெடுங்கிள்ளி ‘காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி’ எனக் குறிப்பிடப்படுகிறான்.
புலவர் கோவூர் கிழாரின் அறிவுரைப்படி உறையூர் ஆட்சியை நலங்கிள்ளியிடம் ஒப்படைத்துவிட்டு இந்தக் காரியாறு வந்த நெடுங்கிள்ளி இந்த ஊரில் இருந்தபோது மாண்டுபோனான்.[1]

சான்று மேற்கோள்[தொகு]

  1. கோவூர் கிழார் - புறநானூறு 47
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரியாறு&oldid=2194237" இருந்து மீள்விக்கப்பட்டது