காரிம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரிம்ப் என்பது தாவரங்களில் உள்ள மலர்களைத் தாங்கிய மஞ்சரி ஆகும். இந்த வகை மஞ்சரியில் விளிம்புகளில் உள்ள மலர்கள் நீண்ட மலர்க்காம்புகளையும் உள்வட்டத்தில் உள்ள மலர்கள் சிறிய மலர்க்காம்புகளையும் கொண்டுள்ளன. பார்ப்பதற்கு மஞ்சரியில் உள்ள அனைத்து மலர்களும் ஒரே மட்டத்தில் காணப்படுகிறது. சைம் வகை மஞ்சரி தட்டையானதாகவும், மேலோட்டமாக பார்ப்பதற்கு மஞ்சரிஅம்பெல் வகையை ஒத்ததாகவும், கூட்டுப்பூத்திரள் போன்ற கிளைகளையும் கொண்டுள்ளன. காரிம்ப் வகை மஞ்சரியில் மலர்களின் அமைப்பு இணையாகவோ அல்லது குறுக்கு மறுக்காகவோ அமைந்து குழிந்தோ அல்லது தட்டையாகவோ தோற்றமளிக்கிறது.

மலாய்டியே குடும்பத்தில் பல சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் ஹாத்தார்ன்ஸ் மற்றும் ரோவன்ஸ் போன்ற சிற்றினங்களில் காரிம்ப் வகை மஞ்சரியில் மலர்கள் அமைந்து காணப்படுகிறது. நார்வே மேப்பிள் மற்றும் யெர்பா மேட் போன்றவைகளும் காரிம்ப் வகை மஞ்சரிக்கு உதாரணங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரிம்ப்&oldid=3645191" இருந்து மீள்விக்கப்பட்டது