காரா கானிடு கானரசு
காரா கானிடு கானரசு என்பது ஒரு துருக்கிய மக்கள் குழுவினரின் கானரசு ஆகும். இது நடு ஆசியாவை 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆண்டது.[1]
இக்கானரசு நடு ஆசியாவில் திரான்சாக்சியானாவை வென்றது. அப்பகுதியை 999 மற்றும் 1211க்கு இடையில் ஆண்டது.[2][3] திரான்சாக்சியானாவில் இவர்களது வருகையானது நடு ஆசியாவில் ஈரானிய ஆதிக்கத்திலிருந்து துருக்கிய ஆதிக்கத்திற்கான ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறித்தது.[4] எனினும், கானிடுகள் படிப்படியாக பாரசீக-அரபு முஸ்லிம் கலாச்சாரத்தில் இணைந்தனர். அதே நேரத்தில், தங்களது பூர்விகத் துருக்கியக் கலாச்சாரத்தின் சில அம்சங்களையும் தக்க வைத்துக் கொண்டனர்.[5]
காரா கானிடு கானரசின் தலைநகரங்கள் கஷ்கர், பலசகுன், உசுகென் மற்றும் சமர்கந்து ஆகியவையாகும். 1040களில் இந்தக் கானரசானது கிழக்கு மற்றும் மேற்குக் கானரசுகளாகப் பிரிந்தது. 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செல்யூக் பேரரசுக்குப் பணிந்ததாகவும், 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காரா கிதை அரசுக்குப் பணிந்ததாகவும் இது திகழ்ந்தது. 1211இல் கிழக்குக் கானரசானது முடிவுக்கு வந்தது. 1213இல் மேற்குக் கானரசானது குவாரசமியப் பேரரசால் முடித்து வைக்கப்பட்டது.
காரா கானிடு கானரசின் வரலாறானது சிதறுண்ட மற்றும் பெரும்பாலும் முரண்பாடாக எழுதப்பட்ட நூல்களில் இருந்து மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. இவர்கள் நாணயவியல் குறித்த ஆய்வுகளும் இவ்வாறே உள்ளன.[6]
மேலும் காண்க[தொகு]
உசாத்துணை[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Asimov 1998, ப. 120.
- ↑ "Encyclopædia Britannica". 2008-12-02 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2006-12-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Grousset 2004.
- ↑ Soucek 2000.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;iranica
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Asimov 1998, ப. 119-144.