காராசேவு

காராசேவு (Ganthiya) (குசராத்தி:காந்தியா) என்பது கடலை மாவிலிருந்துத் தயாரிக்கப்படும் எண்ணெயில் பொறித்த இந்தியச் சிற்றுண்டி ஆகும்.[1] காக்ரா, ஃபாஃப்தா, தோக்லா மற்றும் காண்ட்வி (மற்றும் பிறவற்றுடன்) ஆகியவற்றுடன் சேர்த்து இவை இந்திய மாநிலமான குசராத்தில் இருந்து தோன்றிய மிகவும் பரவலாக அறியப்படும் சிற்றுண்டிகளில் ஒன்றாகும். இவை குசராத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பிரபலமான தேநீர் நேரச் சிற்றுண்டியாகும்.[1] இப்பண்டம் சில நேரங்களில் மென்மையாக இருக்கும். மற்ற இந்திய சிற்றுண்டிகளைப் போல எப்போதும் மொறுமொறுப்பான நொறுக்குத்தீனியாக இருக்காது. இதை விட தட்டையான அதிக படலங்கள்கொண்ட ஒரு வகை பாப்டி காந்தியா என்று அழைக்கப்படுகிறது.[2] இதன் இனிப்பான வகை இனிப்புகாராசேவு (மிதா காந்தியா) என்று அழைக்கப்படுகிறது. குசராத்தின் பாவ்நகர் நகரம் அதன் பல்வேறு வகையான காராசேவுக்கு (காந்தியா) பிரபலமானது. காராசேவு (காந்தியா) என்பது ஃபர்சான் எனப்படும் சிற்றுண்டி உணவின் ஒரு பகுதியாகும்.
தயாரிப்பு
[தொகு]கடலைமாவு, மிளகாய்த் தூள், மஞ்சள், ஓமம் (ஓம விதைகள்) மற்றும் உப்பு ஆகியவற்றைத் தண்ணீருடன் கலந்து ஒரு கெட்டியான மாவை உருவாக்கவும். மாவை ஒரு முறுக்கு உரல் (சேவ்) தயாரிக்கும் இயந்திரத்தில் வைக்கப்பட்டு, ஒரு தடிமனான சேவு தட்டு பொருத்தப்படுகிறது. இந்த இயந்திரம் சேவ் சஞ்சா என்று அழைக்கப்படுகிறது. காராசேவு ஒரு குறுக்கு வட்ட இயக்கத்தில் சூடான எண்ணெயில் பிழியப்படுகிறது. இவை உருண்டு, மிருதுவாக வேகும் வரை வறுத்தெடுக்கப்படுகின்றன. பின்னர் இவை எண்ணெயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, காற்று புகாத ஜாடியில் சேமிக்கப்படுவதற்கு முன்பு உறிஞ்சும் காகிதத்தில் வடிகட்டப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 KapilDave (13 December 2011). "Tourists use ganthiya to lure birds at Nal Sarovar". Archived from the original on 8 November 2015. Retrieved 8 November 2015.
- ↑ Book, Nehas Cook (2020-05-03). "Papdi gathiya recipe| besan papdi with sambharo recipe| How to make gathiya". Nehas Cook Book (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-06-04.
- ↑ "Ganthia (Chickpea Snack) Recipe by Niru Gupta". NDTV Food (in ஆங்கிலம்). Retrieved 2023-12-26.