காரன் மாவட்டம்
காரன்
ضلع خاران ھاران دمگ ضلع خاران | |
|---|---|
மாவட்டம் | |
காரன் கோட்டை | |
பலூசிஸ்தான் மாகாணத்தில் காரன் மாவட்டம் | |
| நாடு | பாகிஸ்தான் |
| மாகாணம் | பலூசிஸ்தான் |
| தலைமையிடம் | காரன் நகரம் |
| அரசு | |
| • வகை | மாவட்ட நிர்வாகி |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 14,958 km2 (5,775 sq mi) |
| மக்கள்தொகை (2023)[1] | |
| • மாவட்டம் | 2,60,352 |
| • அடர்த்தி | 17.4/km2 (45/sq mi) |
| • நகர்ப்புறம் | 80,806 (31.04%) |
| • நாட்டுப்புறம் | 1,79,546 (68.96%) |
| சராசரி எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு | 41.07% |
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| ஒன்றியக் குழுக்கள் | 9 |
| வருவாய் வட்டங்கள் | 4 |
காரன் மாவட்டம் (Kharan district), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். பலூசிஸ்தானில் நடுவில் அமைந்த காரன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காரன் நகரம் ஆகும். காரன் நகரம், மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்மேற்கே 237 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,167 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]காரன் மாவட்டத்திற்கு வடக்கில் நுஸ்கி மாவட்டம், வடகிழக்கில் கலாத் மாவட்டம், கிழக்கில் சூராப் மாவட்டம், தெற்கில் வாசூக் மாவட்டம் மற்றும் மேற்கில் சாகை மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,843 குடியிருப்புகள் கொண்ட காரன் மாவட்ட மக்கள் தொகை 2,60,352 ஆகும்.பாலின விகிதம் 100 பெண்களுக்கு 115.79 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 41.07% ஆகும்.[3][4]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 107,876 (41.43%) உள்ளனர்.[5] நகர்புறங்களில் 80,806 (31.04%) மக்கள் வாழ்கின்றனர்.[3]
சமயம்
[தொகு]இம்மாவட்ட மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 98% ஆகும். 4,480 (2.05%) இந்து & கிறித்தவச் சமயச் சிறுபான்மையோர் 4,480 (2.05%) ஆவார்.
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் பலூச்சி மொழியை 91.24% பேரும், பிராகுயி மொழியை 8.5% பேரும் பேசுகின்றனர்.[6]

மாவட்ட நிர்வாகம்
[தொகு]| வருவாய் வட்டம் | பரப்பளவு
(km²)[7] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு
(2023)[8] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| காரன் வட்டம் | 2,941 | 104,035 | 35.37 | 48.63% | ... |
| சர்-காரன் வட்டம் | 3,539 | 86,015 | 24.30 | 36.70% | ... |
| தோகுமுல்க் வட்டம் | 6,347 | 49,803 | 7.85 | 34.81% | ... |
| பத்கைன் வட்டம் | 2,131 | 20,499 | 9.62 | 35.06% | ... |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Population by Sex, Religion and Rural/Urban, Census - 2023" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Population by Mother Tongue, Sex and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).