காயா தீவு
உள்ளூர்ப் பெயர்: Pulau Gaya | |
|---|---|
காயா தீவின் வான்வழித் தோற்றம் (2026) | |
![]() | |
| புவியியல் | |
| அமைவிடம் | துங்கு அப்துல் ரகுமான் பூங்கா |
| ஆள்கூறுகள் | 6°1′5″N 116°2′7″E / 6.01806°N 116.03528°E |
| தீவுக்கூட்டம் | போர்னியோ (சுந்தா பெருந் தீவுகள்) |
| அருகிலுள்ள நீர்ப்பகுதி | தென்சீனக் கடல் |
| உயர்ந்த ஏற்றம் | 300 m (1,000 ft) |
| உயர்ந்த புள்ளி | உயரமான புள்ளி (300 மீட்டர்கள் (980 அடி))[1] |
| கோத்தா கினபாலு | |
| மக்கள்தொகையியல் | |
| மக்கள்தொகை | 20,000–30,000[2] (2024) |
காயா தீவு (மலாய்: Pulau Gaya; ஆங்கிலம்: Gaya Island; டூசுன்-கடசான்: Gayo; பஜாவு: Goyoh) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டம், தென் சீனக் கடலில் அமைந்துள்ள ஒரு பெரிய தீவாகும். 1,483 எக்டேர் (3,665 ஏக்கர்) பரப்பளவைக் கொண்ட இந்தத் தீவு, துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்காவின் (Tunku Abdul Rahman National Park) ஒரு பகுதியாகும்.[3]
இத்தீவின் அதிக உயரம் 300 மீட்டர் (980 அடி)[1] ஆகும். தீவின் மையப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 180 மீட்டருக்கும் (590 அடி) அதிகமான உயரம் கொண்ட பல மலைத்தொடர்கள் காணப் படுகின்றன
பெயர்க்காரணம்
[தொகு]காயா என்ற பெயர் கடசான் டூசுன் மொழி[4] மற்றும் பஜாவு மொழிகளில்[5] "பெரிய" என்று பொருள்படும் காயோ (Gayo)[6] என்ற சொல்லிலிருந்து உருவானது.
வரலாறு
[தொகு]


1700-களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் போர்னியோ கடற்கரைக்கு அருகிலுள்ள பங்கி தீவுகளில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அப்போது சூலு தலைவர்களுடன் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக, புரூணை சுல்தான் முகமது தாஜுதீன்[7],[8] பிரித்தானியர்களைப் புரூணைக்கு அருகிலுள்ள லபுவான், தீகா அல்லது காயா தீவுக்கு மாறிச் செல்லுமாறு தம்முடைய தூதர் மூலமாக காயா தீவுக்கு அறிவுறுத்தினார். 1765-ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் பணியாற்றிய பிரித்தானிய கடல் ஆய்வாளர் தாமஸ் பாரஸ்ட் இந்தத் தீவில் ஒரு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.
1881-இல் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு (British North Borneo Chartered Company) சபாவை ஆட்சி செய்வதற்கான அரச சாசனம்[9] கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டே, அதாவது செப்டம்பர் 1882-இல், அந்த் நிறுவனம் காயா தீவில் தனது முதல் முக்கிய நிர்வாக மற்றும் வணிகக் குடியேற்றத்தை நிறுவியது. இத்தீவு கூடாட் மற்றும் லபுவான் தீவிற்கு இடையே பயணிக்கும் ஐரோப்பிய அதிகாரிகளின் தங்குமிடமாகவும்; உள்ளூர் காடுகளின் பொருட்களைச் சேகரிக்கும் மையமாகவும் செயல்பட்டது.[9][10] இங்கு ஏற்கனவே பஜாவு இன மக்கள் பழங்குடிகளாக[10] வாழ்ந்து வந்தனர்.
பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம்
[தொகு]தொடத்தில் இது ஒரு பெரிய துறைமுக நகரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய நன்னீர் ஊற்றுகள் இல்லாததாலும், மண் வளம் குறைவாக இருந்ததாலும் பிரித்தானியர் எதிர்பார்த்தபடி இத்தீவு பொருளாதார அடிப்படையில் பெரிய வளர்ச்சி அடையவில்லை. அதே வேளையில் பிரித்தானிய நிறுவனத்தின் புதிய வணிகக் கட்டுப்பாடுகள்; மற்றும் உள்ளூர் வணிகர்கள் மீது விதிக்கப்பட்ட வரிகள் பூர்வகுடி மக்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்தன.
இதனை எதிர்த்து சபா வரலாற்றின் புகழ்பெற்ற வீரரான மாட் சாலே (Mat Salleh Rebellion) தலைமையில் உள்ளூர் மக்கள் கிளர்ச்சியில்[9][10] ஈடுபட்டனர். 9 சூலை 1897 நள்ளிரவில், மாட் சாலே மற்றும் அவரின் ஆதரவாளர்கள் காயா தீவில் இருந்த பிரித்தானியக் குடியேற்றத்தின் மீது அதிரடித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பிரித்தானியரின் வணிக மையங்கள், அலுவலகங்கள் முழுமையாகச் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
இத்தீவு எரிந்தபோது எழுந்த மாபெரும் நெருப்புப் பிழம்புகளை போர்னியோ பெருநிலத்தின் செம்புலான் மற்றும் தஞ்சோங் அரு பகுதிகளில் இருந்த மக்கள் கண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்விற்குப் பிறகு, பிரித்தானியர் காயா தீவில் மீண்டும் ஒரு குடியேற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர்.
காயா தீவு முற்றிலும் அழிக்கப்பட்ட பிறகு, பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் 1899-இல் தீவுக்கு நேர் எதிரே இருந்த போர்னியோ நிலப்பரப்பிற்கு தனது நிர்வாகத்தை மாற்றியது.[9] தீவு எரிந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் உள்ளூர் மக்கள் அந்தப் புதிய இடத்தை அப்பி-அப்பி (Api-Api) என்று அழைத்தனர் (மலாய் மொழியில் 'அப்பி' என்றால் நெருப்பு என்று பொருள்). பின்னர் இந்தப் புதிய குடியேற்றம், பிரித்தானிய அதிகாரியான சர் சார்லஸ் ஜெசல்டன் நினைவாக ஜெசல்டன் (Jesselton) எனப் பெயரிடப்பட்டது. ஜெசல்டன் நகரமே தற்போதைய சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு ஆகும்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி
[தொகு]காலனிய குடியேற்றங்கள் கைவிடப்பட்ட பிறகு, காயா தீவின் இயற்கை வளம் மீட்டெடுக்கப்பட்டது. 1923-ஆம் ஆண்டில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிர்வாகத்தின் கீழ் இத்தீவு ஒரு பாதுகாக்கப்பட்ட வன இருப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1974-இல், காயா தீவு மற்றும் அதன் அருகிலுள்ள சாபி தீவு ஆகியவற்றை இணைத்து துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்கா[11] உருவாக்கப்பட்டது.
தற்போது இந்தத் தீவு பல்லுயிர் பெருக்கம் கொண்ட ஒரு பன்னாட்டுச சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்
[தொகு]- 1 2 "Introduction". Tunku Abdul Rahman Park. Archived from the original on 1 September 2025. Retrieved 2 September 2025.
- ↑ Santos, Jason (9 June 2024). "Gaya Island indigenous residents oppose relocation plan". The Vibes இம் மூலத்தில் இருந்து 6 September 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250906030513/https://www.thevibes.com/articles/news/102321/gaya-islands-indigenous-residents-dismayed-by-sabahs-plan-to-relocate-them.
- ↑ Sokial, Sandra (5 March 2025). "Feathered treasures of Pulau Gaya". The Star இம் மூலத்தில் இருந்து 8 September 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250908123011/https://www.thestar.com.my/news/nation/2025/03/05/feathered-treasures-of-pulau-gaya.
- ↑ Blust 2009, ப. 371.
- ↑ Wong 2004, ப. 1.
- ↑ British North Borneo Chartered Company 1890, ப. 49.
- ↑ Sulaiman & Bala 2019, ப. 122.
- ↑ Forrest 1779, ப. 400.
- 1 2 3 4 Baco & Bala 2021, ப. 6.
- 1 2 3 Thiessen 2012, ப. 163.
- ↑ Sokial, Sandra (5 March 2025). "Feathered treasures of Pulau Gaya". The Star இம் மூலத்தில் இருந்து 8 September 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250908123011/https://www.thestar.com.my/news/nation/2025/03/05/feathered-treasures-of-pulau-gaya.
நூல்கள்
[தொகு]- Forrest, Thomas (1779). A voyage to New Guinea and the Moluccas, from Balambangan : including an account of Magindano, Sooloo, and other islands ... performed in the Tartar Galley, belonging to the Honourable East India company, during the years 1774, 1775, and 1776. Dublin : Price, W. and H. Whitestone, [etc.,etc.], University of California Libraries – via Internet Archive.
- Blust, R. A. (2009). The Austronesian Languages. Pacific Linguistics, Research School of Pacific and Asian Studies, Australian National University. ISBN 978-0-85883-602-0.
- Wong, Danny Tze-Ken (2004). Historical Sabah: Community and society. Natural History Publications (Borneo). ISBN 978-983-812-090-6.
- British North Borneo Chartered Company (1890). Handbook of British North Borneo. W. Clowes.
- Baco, Zainuddin; Bala, Bilcher (2021). "Sejarah Pembangunan Bandaraya Kota Kinabalu, 1881-1962". Jurnal Borneo Arkhailogia (Heritage, Archaeology and History) 6 (1): 1–22. doi:10.51200/jba.v6i1.3513. https://jurcon.ums.edu.my/ojums/index.php/JBA/article/view/3513/2293.
- Thiessen, Tamara (2012). Borneo: Sabah, Brunei, Sarawak. Bradt Travel Guides. ISBN 978-1-84162-390-0.
- Baco, Zainuddin; Bala, Bilcher (2021). "Sejarah Pembangunan Bandaraya Kota Kinabalu, 1881-1962". Jurnal Borneo Arkhailogia (Heritage, Archaeology and History) 6 (1): 1–22. doi:10.51200/jba.v6i1.3513. https://jurcon.ums.edu.my/ojums/index.php/JBA/article/view/3513/2293.
- Sulaiman, Yusry; Bala, Bilcher (2019). "Maharaja Overbeck: Satu Pandangan Mengenai Hak dan Kedudukan Pemerintah Borneo Utara (1877-1881)". Journal of Borneo Social Transformation Studies 5 (1): 120–139. doi:10.51200/jobsts.v0i0.2427. https://jurcon.ums.edu.my/ojums/index.php/jobsts/article/view/2427/2310.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் காயா தீவு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
