உள்ளடக்கத்துக்குச் செல்

காயத்ரி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயத்ரி ரெட்ட்டி
Gayatri Reddy
தேசியம்இந்தியா
பணிமானிடவியலாளர், பேராசிரியர்
அறியப்படுவதுபாலினப்புதுமை மற்றும் பாலினம் ஆய்வுகள்
கல்விப் பின்னணி
கல்விதில்லி பல்கலைக்கழகம் (இளங்கலை)
கொலம்பியா பல்கலைக்கழகம் (முது கலை)
எமரி பல்கலைக்கழகம் (முனைவர், முதுநிலை பொது சுகாதாரம்)
கல்விப் பணி
துறைமானிடவியல்
கல்வி நிலையங்கள்இல்லினோயிசு பல்கலைக்கழகம், சிக்காகோ, கின்சி நிறுவனம்

காயத்ரி ரெட்டி (Gayatri Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மானிடவியலாளர் ஆவார். இவர் பாலினம் மற்றும் பாலினப் புதுமை ஆய்வுகளுக்குப் பங்களிப்பு செய்துள்ளார்.

தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை உளவியல் பட்டம் பெற்ற ரெட்டி அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலை மானுடவியல் பட்டம் பெற்றார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் அட்லாண்டாவிலுள்ள எமரி பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது சிகாகோவில் உள்ள இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் மானுடவியல் மற்றும் பாலினம், மற்றும் பெண்கள் ஆய்வு பாடங்களைக் கற்பிக்கும் இணை பேராசிரியராக உள்ளார்.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஐதராபாத்து நகரத்தின் ஒரு சமூகத்தின் மீது ரெட்டி களப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இவரது தற்போதைய ஆராய்ச்சி அமெரிக்காவிற்கு குடியேறிய தெற்காசியர்களின் பாலினப்புதுமையுடன் தொடர்பு கொண்டுள்ளது.

2007 ஆம் ஆண்டிற்கான பெண்ணிய மானுடவியல் திட்டத்தின் தலைவர்[1] மற்றும் கின்சி நிறுவனத்தில் பாலியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான பல்கலைக்கழக கூட்டமைப்பின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்[2] ஆகிய பொறுப்புகளில் உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Business Meeting Minutes", Association for Feminist Anthropology, November 16, 2006, archived from the original (– Scholar search) on June 9, 2007, பார்க்கப்பட்ட நாள் 2007-10-23 {{citation}}: External link in |format= (help)
  2. "Steering Committee", Kinsey Institute, archived from the original on 2007-10-19, பார்க்கப்பட்ட நாள் 2007-10-23

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரி_ரெட்டி&oldid=3155703" இலிருந்து மீள்விக்கப்பட்டது