உள்ளடக்கத்துக்குச் செல்

காயத்ரிபாலா பாண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காயத்ரிபாலா பாண்டா (பிறப்பு:17 ஏப்ரல் 1977) ஒடியா மொழி பெண் எழுத்தாளர் ஆவார். இவர் புனைவு கதை எழுத்தாளர், பத்திரிக்கையாளர் , இலக்கிய விமர்சகர் என்ற பன்முகத்தன்மை வாய்ந்தவர்.[1]

வாழ்க்கை

[தொகு]

உத்கல் பல்கலைக்கழகத்தில் நூலக மற்றும் தகவல் அறிவியல் முதுகலைப் பட்டத்தில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். பெண்கள் படும் வேதனைகள், பெண்கள் எதிர்கொள்ளும் சமூக அநீதிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை அவரது கவிதைகளின் முக்கிய கருப்பொருள்களாக உள்ளன. முன்னணி ஒடியா செய்தித்தாளான ‘சம்பத்’ பத்திரிகையின் பத்திரிகையாளராக அவர் பணியாற்றியுன்னார். இவருடைய படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் 11 கவிதை தொகுப்புகள் (கவிதைத் தொகுப்புகளில் இரண்டு இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது), நான்கு நாவல்கள் மற்றும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.[2]. உலகின் பல்வேறு இலக்கிய திருவிழாக்களில் கலந்துகொண்டு தனது கவிதைகளை வெளியிட்டுள்ளார்.

பெற்ற விருதுகள் மற்றும் கௌரவங்கள்

[தொகு]
  • 1999-2000 ஆம் ஆண்டு கவிதைகளுக்கான மாநில இளைஞர் விருது
  • 2010ல் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்
  • 2010 இல் உத்கல் சாகித்திய சமாஜ் யுவகபி சன்மான் விருது
  • 2011 “கான்” “GAAN” (கிராமம்) என்ற கவிதைத் தொகுப்புகளுக்காக கேந்திர சாகித்திய அகாதமி பிரதான யுவ புரஸ்கார் விருது
  • 2011ல் ராஜீவ்காந்தி சத்பவன விருது
  • 2012-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இந்தியாவின் சிறந்த பத்து இளம் தலைமுறை எழுத்தாளர் என்ற பட்டியலில் இடம்பிடித்தார்
  • 2008ல் நடைபெற்ற இளம் எழுத்தாளர்களுக்கான சார்க் மாநாட்டில் கலந்து கொண்டார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரிபாலா_பாண்டா&oldid=2926090" இலிருந்து மீள்விக்கப்பட்டது