காயகல்ப மூலிகை கற்றாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நோயற்ற வாழ்வைப் பெற இயற்கை தந்த மூலிகைகளுள் ஒன்று கற்றாழை.இது புல் வகையைச் சார்ந்த தாவரம். மாவீரன் அலெக்சாண்டர் போரில் காயம் பட்ட வீரர்களுக்கு இம்மூலிகைகளைப் பயன்பட்டுத்தினார்.

பயன்கள்[தொகு]

இது தீப்புண்கள்,வயிற்றுப் புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.இருமலுக்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் உயிர் சத்துகள்,தாது உப்புகள்,அமினோஅமிலங்கள் அடங்கியுள்ளன.இதன் இலைகளின் சதைப்பகுதி அதிக பயன்தருகிறது.காயங்களினால் ஏற்படும் வலியைச் சரி செய்யும்.கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்.இதன் தாவரவியல் பெயர்-அலோ வேரா.

வகைகள்[தொகு]

1.பேய் கற்றாழை-சிறுநீரக நோய்களைக் குணப்படுத்துகிறது. 2.செங்கற்றாழை-இரவாத கலைக்குப் பயன்படுகிறது. 3.சோற்றுக்கற்றாழை-மருத்துவ குணம் மிக்கது.

உசாத்துணை[தொகு]

1.டி.வெங்கட்ராவ்பாலு, 'சித்தர்களின் காயகல்ப மூலிகைகள்-28' நர்மதா பதிப்பகம்,சென்னை. 2.வேளாண் செயல்முறைகள், 'மேல்நிலை இரண்டாம் ஆண்டு' தமிழ்நாடு பாடநூல் கழகம்,சென்னை.